தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 21, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்ணைக்கு வந்த குப்பண்ணா, 'என்ன, ஒரே பிள்ளையார் எறும்பாக இருக்கிறதே...' என்றபடியே மேல் துண்டால் தூசு தட்டிவிட்டு அமர்ந்தார். 'என்னதான் தட்டினாலும் சற்று நேரத்தில் எறும்புக் கூட்டம் வந்து விடுகிறதே...' என்றார், அங்கலாய்ப்புடன் அருகிலிருந்தவர்.

குப்பண்ணா சொன்னார்: எறும்புகளால் தனித்தனியே வாழ முடியாது. அவை ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து ஒரே சமூகமாக வசிக்கின்றன. சாரை சாரையாகச் சென்று இரை தேடுகின்றன. தேடிய உணவை தமக்குள் பங்கிட்டு சாப்பிடுகின்றன. ஒரு எறும்பு சமூகத்தில், மூன்று வகை எறும்புகள் உண்டு. ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு. ஒரு கூட்டில் ஒரு ராணி எறும்புதான் இருக்கும். வேலைக்கார எறும்புகளெல்லாம் பெண் எறும்புகளே. ஆனால், அவை முட்டையிடாது. ராணி மட்டுமே முட்டையிடும். மற்ற எறும்புகளை விட, ராணி எறும்பு உருவத்தில் பெரியது. வேலைக்கார எறும்புகள் தான் அதன் சமூகத்தில் எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்கின்றன. சில இரை தேடும்; சில கூட்டில் இருந்து ராணியையும், குஞ்சுகளையும் பாதுகாக்கும். மற்றும் சில, எதிரிகள் உள்ளே நுழையாதபடி கூட்டைப் பாதுகாக்கும்.

வேலைக்கார எறும்புக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு. ஒரு பையில் தனக்குத் தேவையான உணவை நிறைத்து வைத்துக் கொள்கிறது. மற்றொரு பையில், உணவை நிரப்பி வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது. எறும்புகளுக்குத் தாடைகள் உண்டு. சிற்றெறும்பு, நெருப்பெறும்பு, கட்டெறும்பு, நம்மை, தாடைகளால் கடிக்கின்றன. பிள்ளையார் எறும்பு எனப்படும் கறுப்பு எறும்பு மட்டும் கடிக்காது என்றார் குப்பண்ணா.

***

நாதஸ்வர கலைஞர் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கதாநாயகனாக நடிக்க, பாரதிதாசன் வசனத்தில் உருவான படம்,

'கவி காளமேகம்.' இப்படத்திற்கு பாரதிதாசன் தான் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத வேண்டும் என்று நாங்கள் அணுகியபோது, முதலில் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. 'சினிமாத் துறைக்குப் போய் புராணப் படம் எழுதித்தான் சம்பாதிக்க வேண்டுமா?' என்று கேட்டார். 'உங்கள் திறமை வெளிப்பட வேண்டும்' என்று வற்புறுத்திக் கூட்டி வந்தோம். பாரதிதாசனுக்கும், 3,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. திரைப்பட எழுத்தாளருக்கு அந்தக் காலத்தில் அது பெரிய தொகை.

படப்பிடிப்பின் போது, டி.என்.ராஜரத்தினம் குடித்துவிட்டு வருவார். ஒரு நாள் அதிக போதையோடு வந்து படுத்து விட்டார். அவரை எழுப்ப முடியவில்லை. படப்பிடிப்பு தடைப்பட்டது. 'பத்துக் குடம் தண்ணீரை தலையில் ஊற்றுங்கள்' என்றார் பாரதிதாசன், அப்படியே செய்து, துவட்டி, போதையைத் தெளிய வைத்தோம்.

— மு.பொன்னகரம் ரஞ்சையா, ஒரு கட்டுரையில்...

ஒரு இடத்தில், கிளிகளை ஒருவன் ஏலம் போட்டு கொண்டிருந்தான். பேசும் கிளிகள் அவை. எல்லாக் கிளிகளும் விற்றுக் கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு, ஒரு பேசுங்கிளியை வாங்க விருப்பம். கடைசியில் ஒரு கிளிதான் மிச்சம்.

'யாராவது ஏலம் எடுக்கிறீர்களா?' என்று கேட்டான் கிளி விற்பவன். வந்தவன் ஏலம் கேட்க துவங்கினான். இவன் கேட்க கேட்க ஏலத் தொகை கூடிக்கொண்டே போனது. ஏலம் முடிந்து கிளியைக் கையில் வாங்கினான். அப்போது தான் அவனுக்கு சந்தேகம் வந்தது. 'இந்தக் கிளி நல்லா பேசுமா?' என்று கேட்டான். ஏலக்காரன் சொன்னான்; நல்லா பேசுமாவது? இவ்வளவு நேரம் உங்களுடன் போட்டியா ஏலத் தொகையைக் கூட்டினது இந்தக் கிளிதான்!' என்றான்.

***

கல்கி வார இதழில் ராமாயண காவியத்தை, 'சக்கரவர்த்தியின் திருமகன்' என்ற தலைப்பில் எழுதினார் ராஜாஜி. ஆனால், இந்தத் தொடருக்கு மறுப்பாக, 'சக்கரவர்த்தியின் திருமகன்' என்ற தலைப்பில் மு.கருணாநிதி முரசொலியில் ஒரு தொடர் எழுதினார். ராஜாஜியைக் கிண்டல் செய்யும் விதமாக, 'மூக்காஜி' என்ற பெயரில் இந்தத் தொடரை எழுதினார் கருணாநிதி.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us