தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 28, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜாஜி சொல்கிறார்: முதலில் ஆலயப் பிரவேசம் ஏன் மலையாள பிர@தŒத்தில் ஆரம்பிக்கப்படுகிறது என்று சில எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். அவர்களுக்கு ஒரு சின்னக் கதை சொல்ல விரும்புகிறேன்:

தைமூர் என்றும் பெயர் பெற்ற பாரசீக மன்னன், அவனுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு முறை சண்டையில் தோல்வியடைந்து, ஒரு கிழவியின் குடிசையில் ஒளிந்து கொண்டான். அந்தக் கிழவி, அவனுக்கு ஒரு தட்டில் கூழ் வைத்தாள். தைமூர் அதன் நடுவே கையை விட்டான். சூடு தாங்காமல், 'ஐயோ கையை சுட்டுவிட்டதே...' என்று அலறியபடி கையை எடுத்தான்.

'அப்பனே இப்படி அவசரப்பட்டு நடுவில் கொண்டு போய்க் கையை வைக்கலாமா? ஓரத்திலிருந்து எடுத்து சாப்பிடு...' என்றாள். தைமூர் அதில் அடங்கிய உண்மையை உணர்ந்து, அரசியல் வாழ்க்கையிலும், அதைப் பின்பற்றி பெரிய வெற்றி வீரனானான். அதைப் போல நாமும் ஆலயப் பிரவேசத்தை, ஒரு ஓரத்தில் ஆரம்பித்திருக்கிறோம்; சீக்கிரத்தில் மத்திக்கு வந்து விடுவோம்.

—'ராஜாஜியின் உவமைகள்' நூலிலிருந்து...

***

பிரபல இலக்கிய மேடைப் பேச்சாளர் இளசை சுந்தரம், காமராஜர் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். நூலின் இடையிடையே அவர் கூறும் விஷயங்கள், ரொம்ப சுவாரஸ்யம். அதில் சில:

ஓரிடத்தில் ஒரு இந்தியர், ரஷ்யர், அமெரிக்கர் மூவரும் கூடி, இறைவனை பிரார்த்தித்தனர். கடவுள் தோன்றினார். ரஷ்யர், 'ரஷ்யா எப்போது முன்னேறும்?' என்று கேட்டார். 'இன்னும் 50 ஆண்டு ஆகும்' என்றார் கடவுள். 'அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேனே' என்று கூறி அழுதார், ரஷ்யர்.

அடுத்து, அமெரிக்கரும் அவ்வாறே கேட்க, கடவுள், 'இன்னும் 50 ஆண்டு ஆகும்' என்றார். அமெரிக்கர் அழுதுகொண்டே, 'அவ்வளவு காலம் வாழ்ந்து நான் அதைப் பார்க்க முடியாதே!' என்றார்.

கடைசியாக இந்தியர், 'எங்கள் இந்தியா எப்போது முன்னேறும்?' என்று கேட்டது தான் தாமதம், கடவுள் அழுது கொண்டே, 'அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேனே...' என்றார்.

***

@வகமாக போய்க் கொண்டிருந்த ஒரு பஸ், ஒரு மரத்தில் மோதி பலத்த விபத்துக்குள்ளானது. பயணிகள் பலர் சிதறி வெளியே விழுந்தனர். நாலா பக்கமும் கூக்குரல். எல்லாரையும் மருத்துவ மனைக்கு அனுப்ப வேண்டிய கண்டக்டரோ, அடிபட்டுக் கிடக்கிற பயணிகளின் சட்டைப் பையிலே என்னவோ தேடிக் கொண்டிருந்தார். ஏன்? 'யாரோ ஒரு ஆள் டிக்கெட் வாங்கலை, பஸ் கிளம்பின நேரத்திலேருந்து பார்க்கிறேன். கணக்கு சரியா வரலை...' என்றார் கண்டக்டர்.

அப்போது பார்த்து, கை ஒடிந்து விழுந்து கிடக்கிற ஒரு ஆள், ' எனக்கு மூணு ரூபா சில்லரை பாக்கித் தரணும்; மறந்துடாதீங்க...' என்றான் கண்டக்டரை பார்த்து!

***

திருவாவடுதுறையில் பதினைந்தாம் பட்டத்தில் இருந்த அம்பலவாண தேசிகருடைய குரு பூஜை வந்தது. அதற்கு வர வேண்டுமென்று ஆதீனகர்த்தர், பிள்ளையவர்களுக்கு (மீனாட்சி சுந்தரம் பிள்ளை) திருமுகம் அனுப்பியிருந்தார். அதற்காக அவர் திருவாவடுதுறை சென்று அங்கே மூன்று தினங்கள் இருந்து விட்டு வந்தார். வந்தவுடன் அங்கே நிகழ்ந்தவற்றையெல் லாம் ஒரு நண்பரிடம் சொன்னார். நானும் பிற மாணவர்களும் உடனிருந்து கேட்டோம். 'அங்கிருந்த குட்டிகளெல்லாம் என்னை மொய்த்துக் கொண்டு, எப்படியாவது இங்கே வந்திருந்து பாடம் சொல்லித் தர வேண்டும் என்று வற்புறுத்தினர். நானும், ஒப்புக் கொண்டேன்...' என்றார்.

குட்டிகள் என்ற சொல்லை கேட்டவுடன் திடுக்கிட்டேன். மடத்தில் குட்டிகள் இருக்கின் றனரா என்று பிரமித்தேன். குட்டிகள் என்று இளம்பெண்களை யாவரும் கூறும் வழக் கத்தையே நான் அறிந்தவன். பக்கத்திலிருந்த சவேரிநாத பிள்ளையிடம், குட்டிகள் மடத்தில் இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்டேன். அவர் சிரித்து விட்டு, 'சிறிய தம்பிரான்களை மடத்தில் குட்டித் தம்பிரான்கள் என்று சொல்வர். அதைத்தான் சுருக்கி குட்டிகள் என்று வழங்குவதுண்டு' என்று கூறினார்.

— உ.வே. சாமிநாதய்யரின், 'என் சரித்திரம்' நூலிலிருந்து...

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us