sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : பிப் 28, 2016

Google News

PUBLISHED ON : பிப் 28, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நடிகவேள் ராதா' என்ற நூலிலிருந்து: சுயமரியாதை இயக்கத்திற்கு பலமான எதிர்ப்பு இருந்த காலம் அது. சுயமரியாதை இயக்க ஆதரவாளரான ராதா, ஒருமுறை, வெளியூரில் நாடகம் நடத்த போன போது, ராதாவின் நாடகத்தை நடத்த விடக்கூடாது என்று ஒரு கும்பல் முயற்சி செய்தது; ஆனால், எதிர்ப்புக்கு அஞ்சாமல், நாடகத்தை நடத்தினார். நாடகம் முடிந்து, அவர் வெளியே வரும் போது, அவரை அடித்து உதைக்க, கொட்டகை வாசலில், ஒரு கும்பல் காத்திருந்தது. இந்நிலையில், கடைசி காட்சியும் முடிந்து விட்டது. அவர்களிடமிருந்து, 'எப்படி தப்புவது...' என்று யோசனை செய்தார் ராதா.

நாடகத்திற்கு பந்தோபஸ்திற்காக சில போலீஸார் வந்திருந்தனர். அவர்கள், நாடகக் கொட்டகைக்குள் அங்குமிங்கும் உலாவினர். 'மேக்கப்' அறைக்குள் சென்று, போலீஸ் உடுப்பை அணிந்து, மேடைப் பக்கவாட்டிலிருந்து, கூட்டத்திற்குள் இறங்கினார் ராதா. 'ஒதுங்கு... ஒதுங்கு...' என்று கூட்டத்தை சரி செய்வது போல, நாடகக் கொட்டகையை விட்டு வெளியேறி, தன் இருப்பிடத்திற்குப் போய் விட்டார்.

ப.சிவனடி எழுதிய, 'இந்திய சரித்திரக் களஞ்சியம்' நூலிலிருந்து: மேவார் ரஜபுத்திர மன்னர், ராணாவின் மகள் கிருஷ்ணகுமாரி; இவள் பேரழகி. இதனால், ரஜபுத்திர இளவரசர்கள் அனைவருமே, 'கிருஷ்ணகுமாரியை மணப்பது தான் தங்கள் வாழ்க்கையின் பெரும் பேறு...' என நினைத்து, அவளுக்காக ஏங்கினர்.

ஜோத்பூர் மகாராஜா மான்சிங் மற்றும் ஜெய்ப்பூர் அரசர் ஜகத்சிங் இருவருக்கும், கிருஷ்ணகுமாரியை மணம் செய்து கொள்வதில் போட்டா போட்டி! இதன் காரணமாகவே இரு அரசர்களிடையே போர் மூண்டது. அப்போது, கொள்ளையனான அமீர்கான் என்ற பட்டாணியனை, இருவரும் தங்கள் உதவிக்கு அழைத்தனர். இதை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, இரு அரசர்களின் செல்வங்களை எல்லாம் பறித்துக் கொண்டான் அமீர்கான்.

அத்துடன், 'இவர்கள் இருவருள் ஒருவரை தான் கிருஷ்ண குமாரி மணக்க வேண்டும்; இல்லையேல் உயிரைத் துறக்க வேண்டும். இதைத் தவிர போர் நிறுத்தம் ஏற்பட வேறு வழியில்லை...' என்றான் அமீர்கான்.

கிருஷ்ணகுமாரி தனக்கு கிடைக்காத பட்சத்தில், அவள் இறந்தாலும் பரவாயில்லை என்று ஜோத்பூராரும், ஜெய்ப்பூராரும் நினைத்தனர். இது, வீரம் செறிந்த ரஜபுத்திர பண்பிற்கே மாறானது.

இரக்கமற்றவர்கள் எல்லாம் கூடி, 'ராஜபுதனத்து மலர்' என்று வர்ணிக்கப்பட்ட கிருஷ்ணகுமாரியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

அவளை கொல்வதற்காக, ஒருவனை அனுப்பினர். அவன், அவளை நேரில் பார்த்து, வாளைக் கீழே போட்டு, கதறி அழுதான்.

அடுத்து, அவளைக் கொல்லும் பொறுப்பு அந்தப்புரத்து பெண்டிரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், இளவரசி பருகும் பழ ரசத்தில், நஞ்சு கலந்து கொடுத்தனர். அவள் பருக முனைகையில், அவள் தாய் அழுது, புலம்பி அரற்றினாள். அதைப் பார்த்து உண்மையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணகுமாரி, 'அம்மா... பிறவி எடுத்த நாளிலிருந்து தியாகம் செய்வதற்கென்றே விதிக்கப்பட்டவர்கள் நாம்... அதற்கெனவே, நாம் பிறக்கிறோம். இத்தனை காலம் என்னை உயிர் வாழ வைத்ததற்கு நன்றி...' என்று கூறி, சொட்டு கண்ணீர் கூட விடாமல், நஞ்சை அருந்தி, வீழ்ந்து மாண்டாள்.

செய்தியை அறிந்து மனம் கலங்கிய அமீர்கான், ஜெய்ப்பூர் மன்னனைப் பார்த்து, 'நீங்கள் மார்தட்டிப் பேசும் ரஜபுத்திர வீரமும், ஆண்மையும் இதுதானோ...' என்றான்.

டால்ஸ்டாயின் குட்டிக்கதை: நகரத்தில் படிக்கும் மகன் ஒருவன், தன் தந்தையைப் பார்க்க, கிராமத்திற்கு வந்திருந் தான். அவனிடம், 'இன்று வயலில் வேலை இருக்கிறது; மண்வெட்டியுடன் எனக்கு உதவியாக வந்து சேர்...' என்றார் தந்தை.

'நான் பட்டணத்தில்  படித்தவன்; கிராமத்தினர் பேசுகிற வார்த்தைகள் கூட எனக்கு மறந்து விட்டன. மண்வெட்டி என்றால் என்ன என்று கூட இப்போது எனக்குத் தெரியாது...' என்று கூறி, வேகமாக வெளியில் நடந்தவன், வழியில் கிடந்த மண்வெட்டியில் காலை இடித்துக் கொண்டான். 'ஆ!' என்று கத்தி, 'எந்தப் பயல்டா மண்வெட்டியை வழியிலே போட்டது...' என்றான்.

'தமிழ் நாடக வரலாறு' நூலிலிருந்து: சினிமாக் கலை வருவதற்கு முன், நாடகங்களே புகழ்பெற்று வலம் வந்தன. 'மனோகரா' நாடகத்தில், நாயகன், நாயகியாக, வேலுநாயர் - எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்து வந்தனர். ஒவ்வொரு நாளும், மேடையில் ஏதேனும் புதுமைகள் செய்து, ரசிகர்களை மகிழ்விப்பர். ஒருநாள், மனோகரனுக்கு, காதலி மாலை அணிவிப்பதாக ஒரு காட்சி. வேலு நாயரோ ஆறடி உயரம்; மேலும், அரையடி உயரத்திற்கு கிரீடம்.

எஸ்.டி.சுப்புலட்சுமி நாலரை அடி உயரம். இதனால், அவரால் மாலை போட இயலவில்லை. புரிந்து கொண்ட நாயர், 'இந்த மனோகரன் யாருக்கும் தலைவணங்க மாட்டான்; ஒன்று செய்...' என்று கூறி, அருகிலிருந்த நாற்காலியைக் காட்டி, 'இதன்மீது ஏறி நின்று, எனக்கு மாலை இடு...' என்றார். சுப்புலட்சுமி அவ்வாறே செய்ய, ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us