PUBLISHED ON : ஏப் 10, 2011

நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. சிறையில், முன்னும், பின்னும் நடந்து கொண்டிருந்தேன்; பிறகு, கொஞ்சம் நேரம் படித்தேன். எனினும், என் கண்கள் களைப்பாக இருந்தன. ஆனால், தூக்கம் இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டுதான் இருந்தது. கண்களை மூடிப் படுக்கையில், நம்பிக்கையுடன் விழுந்தேன்; ஆனால், அதிர்ஷ்டமில்லை. பனி ரெண்டு, ஒன்று, இரண்டு, மூன்று மணியாகியும் நான் நேரத்தை எண்ணிக் கொண்டு உருண்டு, புரண்டு கொண்டிருந்தேன். கடைசி யில், மூன்று மணியானவுடன் நான் தூக்கத்தில் விழுந்தேன். நேற்று மாலையில் சிறை வாழ்க்கை பற்றி எனக்கு ஒரு விசித்திரக் கனவு வந்தது.
நான், ஒரு தனிச் சிறையில் இருக்கிறேன். நிற்பதற்கு எவ்வளவு உயரமோ, கைகளை நீட்டுவதற்கு எவ்வளவு அகலமோ அந்த அளவுதான் சிறை இருந்தது. கூரை ஒழுகி, மழை மிகப் பெரிய துளிகளாக என் மீது விழுந்தது. மழைத் துளிகள் என்னைத் தொட்டவுடன், அவை காசுகளாக மாறி, என் தலையைத் தாக்குகிறது. வெளியே போவதற்கு அழு கிறேன்; கதவு பூட்டியிருக் கிறது; தப்பிக்க வழி இல்லை. மழைத் துளிகள் தொடர்ச்சியாக விழுந்து, என் தலையில் துளையிட்டு விட்டன. வலி பயங்கரமாக இருந்தது. நான் சாக வேண்டியதுதான் என்று உணர்ந்த போது, சட்டென்று எழுந்தேன். நான் சிறை அறையில் உள்ள படுக்கையில் இருந்தேன். வெளியே மழை பெய்து கொண் டிருந்தது. ஒழுகும் கூரையிலிருந்து என் நெற்றியில் பெரிய நீர்த்துளிகள் விழுந்தன.
இந்தக் கனவுக்குப் பின் என்னால் உறங்க முடியவில்லை. நான் வெறுமனே படுத்துக் கிடந்து, விடியலுக்காகக் காத்திருந்தேன். விசில் சப்தம், கேட்டது. இது, கதவு திறப்பதற்கான நேரம்.
சிறையும் தனக்கேயுரிய, நகைச்சுவைகளை வைத்திருக்கிறது. நேற்று, சிறை மேட்ரன் (பெண் வார்டன்) என்னிடம் வந்தாள். 'ஒவ்வொரு காலையும் உங்கள் அறையின் கதவைத் திறக்கும் போது, உங்களைத் தொந்தரவு செய்யாமலிருக்க முயற்சிப்பேன். ஏனெனில், இரவுகளில் நீங்கள் நன்றாகத் தூங்குவதில்லை என்று தெரியும். இரவு படுக்கையிலேயே கைதி இறந்து போயிருந்தால், எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அதனால்தான், 'சிறை விதிகளின்படி நான் வந்து உங்களை எழுப்பி விடுகிறேன்...' என்றாள். நான் மோசமான மரணத்தை எதிர்ப்பார்த் திருக்கும் போது, தூக்கத்தில் இறக்கலாம் என்பது சந்தோஷமான விஷயம் தானே!
— ஜவஹர்லால் நேருவின் சகோதரி, விஜயலட்சுமி பண்டிட் எழுதிய, 'எனது சிறை நாட்கள்' நூலில்.
***
'நான் இந்த (அமெரிக்க) நாட்டிற்கு வந்து, சிகாகோ பொருட்காட்சி சாலையை சுற்றிப் பார்த்தபடியே போய்க் கொண்டிருந்த போது, பின்புறமிருந்து ஒருவன் என் தலைப் பாகையைப் பிடித்து இழுத்தான்; நான் திரும்பிப் பார்த்தேன். அவன் நன்றாக உடை உடுத்தி, நல்ல மனிதன் போலவே இருந்தான். அவனிடம் பேசத் தொடங் கினேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கண்டபோது, அவன் குறுகிப் போனான். மற்றொருமுறை அதே பொருட் காட்சி சாலையில் வேறொரு வருடன் என்னைப் பிடித்துத் தள்ளி னான். 'ஏன் இப்படி செய் கிறாய்?' என்று நான் கேட்டேன். நான் கேட்டவுடனே அவனும், வெட்கிப் போய் சற்று தடுமாற்றத் துடன், 'ஏன் நீ இப்படி விசித்திரமாக உடை உடுத்தி இருக்கிறாய்?' என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் கேட்டான்.
இவர்களின் கனிவெல்லாம் சொந்த மொழி, சொந்த உடை என்ற எல்லைக்குள் நின்று விடுகின்றன. இந்த எண்ணம் அவர்களிடம் மனி தாபிமானத்தையே வற்றச் செய்து விடுகிறது. தன்னைப் போல் நான் ஏன் உடை உடுத்தவில்லை என்று கேட்டு, என் உடை காரணமாக என்னைக் கேவலப்படுத்த முயன் றானே ஒருவன், அவன் ஒரு நல்ல மனிதனாக, நல்ல தந்தையாக, நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால், மாறுபட்ட உடையில் ஒருவனைக் கண்டதும், அவனது இயல்பிலுள்ள கனிவு மறைந்து விடுகிறது.
புதியவர்கள் எல்லா நாடுகளிலும் ஏமாற்றப் படுகின்றனர். ஏனென்றால், அங்கே தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது அவர்களுக்கு தெரியாது.
— அமெரிக்க நாட்டு (சிகாகோ) சொற்பொழிவில் விவேகானந்தர்.
- நடுத்தெரு நாராயணன்
