தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூன் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எழுத்தாளர், விக்கிரமன் எழுதிய,'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து: பல எழுத்தாளர்கள், காபி பிரியர்களாக இருப்பர். இந்த பிரியத்தால், ஒரு கட்டத்தில், 'காபி பேலஸ்' என்ற ஓட்டலை, எழுத்தாளர் ஒருவர், சிறிது காலம் நடத்தினார். அவர் யார் தெரியுமா?

சா.விஸ்வநாதன் என்ற, சாவி தான்!

சின்ன அண்ணாமலையும், சாவியும் இணைந்து, ஊருக்கு ஊர், மல்யுத்த போட்டிகளை நடத்தினர். இதில், இருவருக்குமே நல்ல லாபம்.

உடனே, சாவி, என்ன செய்தார் தெரியுமா?

சென்னை, தி.நகர் மங்கேஷ் தெருவில், 'காபி பேலஸ்' என்ற ஓட்டலை துவக்கினார். ருசியான காபி, டிபன் வகைகளுடன் ஓட்டல் நன்றாக நடந்தது; ஒரு கட்டத்தில் நஷ்டம் ஏற்படவே, மூடி விட்டார்.

வானதி திருநாவுக்கரசு எழுதிய, 'நினைக்க... நினைக்க...' நுாலிலிருந்து: பதிப்பகம் என்றாலே, அனைவருக்கும், வானதி பதிப்பகம் தான் முதலில் நினைவில் வரும். இதன் முதலாளி, திருநாவுக்கரசு. ஆரம்ப காலத்தில், 'ஜில் ஜில்' என்ற பெயரில், குழந்தைகள் இதழ் ஒன்றை நடத்தி வந்தார். மேலும், 'ஜில் ஜில்' வெளியீடுகள் என, குழந்தைகளுக்கான புத்தகங்களையும் வெளியிட்டு வந்தார்.

அண்ணாதுரை, இவரிடம், 'உன் பதிப்பகத்திற்கு, நல்ல தமிழ் பெயராக சூட்டு...' என, கூறினார்.

ஒருமுறை, 'ஜில் ஜில்' குழந்தைகள் இதழ் மற்றும் அதன் வெளியீடுகளை எடுத்துச் சென்று, கல்கியிடம் காட்டினார்.

'பேஷ்... பேஷ்... நன்றாக செய்...' என, வாழ்த்தியதுடன், அடுத்த வாரமே, 'கல்கி' இதழில், 'ஜில் ஜில்'

இதழ் பற்றியும், வெளியீடுகள் பற்றியும் ஒரு அற்புதமான மதிப்புரை வழங்கினார், கல்கி.

இதுபற்றி, திருநாவுக்கரசு கூறும்போது, 'கல்கியின் விமர்சனங்களை தொடர்ந்து, ஏகப்பட்ட மணியாடர்கள் குவிந்தன. அவரது எழுத்துக்கு, எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என, அப்போது உணர்ந்தேன்.

'அந்த பணத்தை வைத்து, 'ஜில் ஜில்' அச்சுக்கூடம் துவக்கினேன். பிறகு, அதுவே, வானதி பதிப்பகம் என, பெயர் மாற்றம் பெற்றது...' என்கிறார்.

'பொன்னியின் செல்வனின்' நாயகி, வானதி மீது அபார பற்று கொண்டவர், திருநாவுக்கரசு.

பதிப்பகத்திற்கு பிறகு, தன் பெண்ணுக்கும், வானதி என்ற பெயரையே சூட்டினார்.

திரைப்பட இயக்குனர், முக்தா.வி.சீனிவாசன் எழுதிய, 'கலைஞர்களோடு நான்' நுாலிலிருந்து: மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், நடிகை, மனோரமாவை கதாநாயகியாக வைத்து, ஒரு படம் எடுத்தது. ஆனால், அவரை தேடி, நகைச்சுவை வேடங்களே வந்தன. அதன்பின், நகைச்சுவை நடிகையாகி விட்டார்.

ஒருமுறை, 'நீ, கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று, தீர்மானத்தோடு இருந்திருக்கலாமே...' என்றார், ஒருவர்.

'அந்த தப்பை நான் செய்யலே... அப்படி செய்திருந்தா, அஞ்சு வருஷமோ, பத்து வருஷமோ, என்னை கதாநாயகியா வெச்சிருந்து, அப்புறம் இன்னொரு நாயகி வந்ததும், துாக்கி எறிஞ்சிருப்பாங்க...

'நல்லவேளை, நகைச்சுவை நடிகையானதில் தப்பிச்சேன். அதனால், இன்று வரை தொடர்ந்து நடிச்சுக்கிட்டு இருக்கேன்...' என்றார், மனோரமா.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us