sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மார் 28, 2021

Google News

PUBLISHED ON : மார் 28, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தோன்றியது எப்படி?' நுாலிலிருந்து: கடந்த, 1526ல், அப்போதைய, 13வது போப் கிரிகேரி, பழைய ஜூலியன் காலண்டர்படி, ஏப்., 1ம் தேதி, புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்ததை மாற்றி, புதிய கிரிகேரியன் ஆண்டு கணக்குப்படி, ஜன., 1ம் தேதிக்கு மாற்றினார்

* ஜன., 1ம் தேதி, புத்தாண்டாக அறிவிக்கப்பட்டாலும், பல நாடுகளில் மக்கள்,

ஏப்., 1ம் தேதியை புத்தாண்டு நாளாக கொண்டாடி வந்தனர். இப்படி கொண்டாடுபவர்களை, முட்டாள்கள் என, வலியுறுத்தும் விதமாக, ஏப்., 1ம் தேதியை, 'முட்டாள் தினம்' என, அறிவித்து, கிண்டல்கள் எழுந்தன.

ஆனால், கடந்த, 1466ல், மன்னர் பிலிப்பை, அவரது அரசவை விகடகவி, பந்தயம் கட்டி, தோற்கடித்து, முட்டாளாக்கினார். அந்த ஆண்டு முதல் இத்தினத்தையே முட்டாள்கள் தினமாக கொண்டாட ஆரம்பித்தனர்

* போப் அறிவித்த புதிய புத்தாண்டு நாளை, ஸ்காட்லாந்து நாட்டில், 1660லும், இங்கிலாந்தில், 1752லும், ஜெர்மனி, நார்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள், 1780ல் தான் ஏற்றன

* இங்கிலாந்து மற்றும் போலந்து நாட்டில், நடு பகல் வரை மட்டுமே ஒருவரை முட்டாளாக்கலாம்.

அதன்பின், முட்டாள்களாக்க நினைப்பவர்கள்,தானே அந்த

பட்டத்தை சுமக்க வேண்டியிருக்கும்

* இங்கிலாந்தில், முட்டாள்கள் தினத்தை, 'நோட்லி, காப், காபி, நோடி' என, பல சிறப்பு பெயர்களில் அழைப்பர்

* ஐஸ்லாந்து நாட்டில், ஒரு பேப்பரில், 'செண்ட் தி பூல் பர்தர்' என எழுதி, மடித்து, நண்பர்களுக்கு அனுப்புவர். அவர்கள் ஏதோ ரகசியம் உள்ளதாக, ஆர்வமாக பிரித்து படித்து, ஏமாந்தவுடன், அதை மற்றவருக்கு அனுப்புவர்

* டானிஷ், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவீடன் நாடுகளில், ஏப்., 1ல் வெளியாகும் செய்தித் தாள்களில், நிச்சயம் ஒரு பொய் செய்தியாவது இடம்பெற்றிருக்கும்

* இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில், ஒரு பேப்பரில், காகித மீன் செய்து, மற்றவருக்கு தெரியாமல், அதை முதுகில் ஒட்டி முட்டாளாக்குவர்

* பக்ரைன் நாட்டில், 1973ம் ஆண்டு முதல், முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது

* லெபனான் நாட்டில், முட்டாள் தினத்தன்று, கட்டாயம் ஒரு பொய் சொல்லி, எதிராளியை அசத்த வேண்டும்

* ஸ்பானிஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில், டிச., 28ம் தேதியும், கிழக்கு சிரியாவில், ஜன., 11ம் தேதியும் முட்டாள் தினமாக கொண்டாடப்படுகிறது

* சில ஐரோப்பிய நாடுகளில், முட்டாள் தினங்களில், விழா மற்றும் ஊர்வலம் நடைபெறும். அதில் கலந்துகொள்வோர், கோமாளித்தனமாய் ஆடைகளை அணிந்து, நடனங்கள் ஆடியபடியே, உள்ளூர் மக்களை மகிழ்விப்பர். சில இடங்களில், பொய் கூறும் போட்டி நடத்தி, பரிசளிப்பர்.

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us