தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : நவ 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மராட்டியப் பேரரசை நிறுவிய சிவாஜி, செஞ்சிக் கோட்டையை, பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினார். அங்கு தன் பிரதிநிதியை நியமித்தார். 1680ம் ஆண்டு சிவாஜி இறந்ததும், மராட்டியரிடையே பிளவு உண்டானது. சிவாஜியின் மகனான ராஜாராம் முகலாயப் படையினரிடம் பிடிபடாமல், தெற்கு நோக்கி வந்த போது, அவர் செஞ்சிக் கோட்டைக்குள் புகுந்து கொண்டார். அவர் செஞ்சியைத் தலைநகராக்கி சில காலம் வரை அங்கே இருந்தார்.

ராஜாராம், செஞ்சியிலிருந்து தப்பிச் சென்ற பின், அக்கோட்டை முகலாயர் வசம் வந்தது. முகலாயப் படையுடன் வந்த ரஜபுத்திரரான சரூப்சிங் கோட்டைக் காவல ரானதும் அவரை அடுத்து அவருடைய மகன் தேஜ் சிங் என்ற தேசிங்கு செஞ்சியில் தன்னாட்சி செய்ய முயன்று, ஆற்காட்டு நவாபுடன் போரிட்டு, களத்தில் மடிந்தார்.

அதன் பிறகு செஞ்சி, கர்நாடக நவாப்பிற்கு கீழ்பட்டது.

ஆங்கிலேயரும், பிரஞ்சுக் காரரும் இந்தியாவில் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டு போரிட்டுக் கொண்டிருந்த கால கட்டங்களில், செஞ்சிக் கோட்டை, 1760 முதல், 1761 வரை பிரஞ்சுக்காரர் வசம் இருந்தது. எனினும், ஆங்கிலேயர் அதை, 1761ம் ஆண்டு கைப்பற்றினர். அதன்பின் ஹைதர் அலி செஞ்சியைத் தாக்கி (1780) பிடித்துக் கொண்டார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி, இந்தியாவில் கிட்டத்தட்ட முழுமை பெற்றதும், செஞ்சிக் கோட்டை பிரிட்டிஷார் வசமானது. அதன் பிறகு, அந்தக் கோட்டை தன் பழம் பெருமையை இழந்து விட்டது.

— 'செஞ்சிக் கோட்டை வரலாறு' நூலிலிருந்து...

தாத்தா, காலையில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில், வெயிலில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பார். தகப்பனார் ஊரில் இல்லாத காலம் அது. என் தாயார் என்ன சமையல் செய்வதென்று தாத்தாவைக் கேட்டு வரும்படி என்னை அனுப்புவார். அப்போது, எனக்கு ஆறு வயது இருக்கும்.

நான் போய், 'இன்றைக்கு என்ன சமையல் செய்கிறது?' என்று கேட்பேன்.

அவர், 'சமையலா...' என்று நீட்டுவார்.

அவருக்கு எல்லாம் வெறுப்பாகத் தோன்றும். 'சமையல் தானே... மண்ணாங் கட்டி, தெருப் புழுதி, சாம்பல், கொழுக்கட்டை...' என்பார். அவருக்கு இந்த உலகத்திலே உள்ள வெறுப்பின் அடையாளம் அந்த வார்த்தைகள் என்று எனக்கு அப்போது தெரியாது.

குடுகுடுவென்று ஓடிப்போய், தாயாரிடம் தாத்தா, சொன்னதை அப்படியே ஒப்பிப்பேன்.

'போடா பைத்தியம்... என்ன சமையல் பண்ணுவது என்று போய் கேட்டு வா...' என்று மீண்டும் அன்னையார் அனுப்புவார்.

நான் மறுபடியும் போய் தாத்தாவைக் கேட்பேன்.

அவர் ஆர அமர யோசித்து, 'கத்தரிக்காய் இருக்கா?' என்று கேட்பார். அதற்கு ஒரு தடவை ஓடிப்போய்க் கேட்டு வந்து பதில் சொல்வேன். 'பிஞ்சா இருக்கா?' என்று அடுத்த கேள்வி போடுவார். அதற்கும் ஒரு முறை ஓடிப்போய் வருவேன்.

'அந்தக் கத்தரிக்காயை சுட்டுட்டு...' சிறிது நிறுத்துவார். 'தெரியறதா? அதை நன்னாச் சுட்டுத் தாளிச்சு கொட்டி...' அவர் சொல்லும் வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஹூங்காரம் செய்து கொண்டே இருப்பேன். இல்லாவிட்டால், அவர் பேச்சு மேலே போகாது.

'தாளிச்சுக் கொட்டறப்போ உளுத்தம் பருப்பைப் போட்டுடுவா. அதைப் போடச் சொல்லாதே. எண்ணையை அதிகமாக விடச் சொல்லாதே...'

அப்போது மேலெழும் கோபத்தால், சிறிது நேரம் மவுனம் ஏற்படும். மறுபடியும் ஆரம்பிப்பார்.

'அதை அம்மியிலே வச்சு நன்னா ஓட்டி, ஓட்டி, ஓட்டி, ஓட்டி அரைக் கணும்...' அந்த, 'ஓட்டி...' என்னும் சொல்லை அவர் பலமுறை சொல்லுவார். அப்படிச் சொல்லும் போது, அவர் கைகளின் அபிநயத்தைப் பார்த்தால், உண்மையா கவே கத்தரிக்காய்த் துவையலை அரைப்பவர்கள் கூட அவ்வளவு சிரத்தை கொள்ள மாட்டார்களென்று தோன்றும்.

இப்படி என் பாட்டனாருக்குப் பிரியமான கத்தரிக்காய் துவையலின் பக்குவத்தைப் பற்றியும், வேறு விஷயங்களைப் பற்றியும் அவர் சொல்லும் சமாசாரங்களை, என் தாயாரிடம் சொல்லும்

வேலை எனக்கு அடிக்கடி நேரும்.

இந்த சம்பாஷணை யைக் கேட்ட அயலார் கள் எனக்குக் கத்தரிக்காய்த் துவையல் என்ற பெயரை வைத்து விட்டனர்.

— 'என் சரித்திரம்' நூலில் உ.வே.சாமிநாதய்யர்.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us