தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : பிப் 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜாஜியின் தினசரி நடவடிக்கைகள் என்ன? காலை ஆறு மணிக்கெல்லாம், சரியாக படுக்கையிலிருந்து எழுந்து விடுவார். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, காபி சாப்பிடுவார். 7.30 வரை தினசரிகளையும், சஞ்சிகைகளையும் தாமே படித்துப் பார்த்து, முக்கியமான இடங்களில் பென்சிலால், 'மார்க்' செய்வார். சில பத்திரிகைச் செய்திகளுக்கு அவசியமானால், தாமே, தம் கைப்படக் குறிப்புகள் தயாரித்து வைப்பார்.

தினசரி, வீட்டின் ஹாலிலேயே குறுக்கும், நெடுக்குமாக ஒரு குறிப்பிட்ட கணக்கு வைத்துக் கொண்டு, 500 ஸ்டெப்புக்குக் குறையாமல் நடப்பார்.

தினமும், 'செல்ப் ஷேவ்' செய்து கொள்வார். வெந்நீரில் தான் குளிப்பார். குளித்த பின் சாப்பாடு. இது, ஒத்துக்கொள்ளும், இது வேண்டாம் என்ற பாகுபாடு இல்லை. ருசித்து, ரசித்துச் சாப்பிடுவார்; அளவு ரொம்ப குறைவு. பச்சரிசி சாதம், பருப்பு, ரசம், குழம்பு எல்லாம் போட்டுக் கொள்வார். நாள் கிழமைகளில், 'கல்கி' தோட்டத்திலிருந்து வரும் சர்க்கரைப் பொங்கல் போன்ற, ஸ்பெஷல் அயிட்டங்களை, கொஞ்சம் ருசி பார்த்து மகிழ்வதும் உண்டு.

காலை, 9.30 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும். 10 மணியிலிருந்து, 11.30 வரை, 'ரெஸ்ட்' எடுத்துக் கொள்வார். 12 மணியிலிருந்து, 1 மணி வரை, ஸ்வராஜ்யா பத்திரிகை சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பார். உதவியாளர்கள், அவர் சொல்லும் கடிதங்களை எழுதித் தயார் செய்வர். மதியம், 12 மணிக்குள், ஒரு முறை காபி சாப்பிடுவார். முன்பு போல சுடச்சுட அருந்துவதில்லை. மிதமான சூட்டில் காபி.

பிற்பகல் நேரங்களில் அவ்வப்போது, சற்று கண் அயர்ந்து, வெளிநாட்டுப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் எல்லாம் படிப்பார். பிற்பகல், 4.30 மணிக்குள் இரண்டாவது சாப்பாட்டை முடித்து விடுவார். சூடான இட்லி, தயிர் சாதம் முதலியன அவருக்குப் பிடித்த உணவு வகைகள்.

பிற்பகலில் சில சமயம், பார்வையாளர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். மாலையில், 5 மணிக்கு மேல், காரில், 'டிரைவ்' செல்வார். சில சமயம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நும்பல் கிராமம் வரைக்கும் செல்வார்; சில நாட்கள் கடற்கரைப் பக்கம் செல்வார்.

மாலை 7 மணி அளவில் வீடு திரும்புவார். விருப்பமிருந்தால், 'காம்ப்ளான்' ஒரு கப் அருந்துவார். சில சமயம் மாலைச் செய்தித் தாள்களைப் படிக்கச் சொல்லி கேட்பார். சீக்கிரமே படுத்து உறங்கச் சென்று விடுவார்.

—1971ல் ஒரு பத்திரிகையில்.
***

'கவலை இல்லாத மனிதன் யாராவது இருப்பானா?' என்ற சந்தேகம் வந்தது ஓர் அரசருக்கு. கடும் உச்சி வெயில் நேரத்தில், உழவன் ஒருவன் ஆனந்தமாகப் பாட்டுப் பாடிக் கொண்டு, தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான்.

அரசர், அந்த உழவனை அணுகி, 'கவலையில்லாதவன் போல் இருக்கிறாயே... உன்னுடைய வருமானம் என்ன?' என்று கேட்டார். 'என்னுடைய தினசரி வருமானம், 50 ரூபாய்!' என்றான் உழவன்.

'இந்தப் பணத்தில் எப்படி கவலை இல்லாமல், குடும்பத்தை நடத்த முடியும்?' என்று கேட்டார் அரசர்.

'என் வருமானத்தில் தினசரி, 13 ரூபாய் பழைய கடனுக்கும், 12 ரூபாய் தருமத்திற்கும், 13 ரூபாயை வட்டிக்கும் கொடுத்துவிட்டு, மீதி உள்ள, 11 ரூபாயை நானும், என் மனைவியும் எடுத்துக் கொள்கிறோம்...' என்று கூறினான் உழவன்.

'பழைய கடனுக்கு, 13 ரூபாய் கொடுப்பதாக கூறுகிறாய். கடன் இருந்தும் கவலை இல்லையா?' என்றார் அரசர்.

உழவன், 'நான் பழைய கடன் என்று குறிப்பிட்டது, என்னுடைய வயதான தாய், தந்தையருக்கு செலவு செய்ததை; தருமம் என்று குறிப்பிட்டது, என்னுடைய விதவைச் சகோதரிக்கும், அவளது பிள்ளைகளுக்கும் செலவு செய்வதை; வட்டிக்கு கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டது, என் பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுவதை!' என்றான்.

— ஒரு உபன்யாசத்தில் கேட்டது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us