தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!


PUBLISHED ON : பிப் 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரேயாவுக்கு பாராட்டு!

இந்தியில் அக்ஷய் கன்னா - ஸ்ரேயா நடித்துள்ள படம், ஹலி ஹலி சோர்ஹை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கும் இப்படம், அன்னா ஹசாரேவுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது, ஸ்ரேயாவின் நடிப்பை, அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். 'இந்த பாராட்டு, உலக விருதுகள் அனைத்தையும் விட பெருமைக்குரியது...' என்று சொல்கிறார் ஸ்ரேயா.

— சினிமா பொன்னையா.

அர்ஜுனுக்கு ஏமாற்றம்!

மினிமம் கேரன்ட்டி ஹீரோவாகி விட்டார் விமல். அவர் கைவசம், 3 பேர் 3 காதல், சிலுசிலுன்னு ஒரு காதல், மசாலா கபே, இஷ்டம், அத்தனைக்கும் ஆசை, என ஏகப்பட்ட படங்கள் உள்ளன. இதில், 3 பேர் 3 காதல் படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடித்தும், விமலுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் டைரக்டர் வசந்த். இதனால், தன்னையும் ஒரு ஹீரோவாக வெளிப்படுத்துவார் இயக்குனர் என்று நம்பியிருந்த அர்ஜுன் ஏமாற்றமடைந்துள்ளார்.

— சி.பொ.,

பில்லா - 2வில் நயன்தாரா!

அஜீத்துடன், பில்லா படத்தில் நடித்த நயன்தாராவை, பில்லா-2 படத்திலும் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. கதைப்படி முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும், தொடர்பு இருப்பதால், நயன்தாராவே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று, அவரிடம் பேசி வருகிறார் இயக்குனர் சக்தி டோல்டி. அவரும் யோசித்து பதில் சொல்வதாக கூறியிருக்கிறார். தேடின பொருள் காலிலே தட்டினது போல.

— எலீசா.

அமலா பால் படக்கூலி எகிறியது!

அமலா பாலின் கால்ஷீட்டுக்காக, பல கம்பெனிகள் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. அதில், சில கம்பெனிகள், அவரது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி விட, இப்போது, 50 லட்சம் ரூபாயை தாண்டி விட்டார். மேலும், வெளியாகவிருக்கும், முப்பொழுதும் உன் கற்பனை கள், காதலில் சொதப்புவது எப்படி? போன்ற படங்களின் வெற்றியைப் பொறுத்து, அமலா பாலின் படக்கூலி இன்னும் எகிறும் என்பதால் அவருக்கு, 'அட்வான்ஸ்' கொடுத்து முன்பதிவு செய்து வைக்க, முன்னணி கம்பெனிகளும் அவரை துரத்துகின்றன. ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்!

— எலீசா.


ஸ்ருதிஹாசன் கனவு வேடங்கள்!

'அப்பாவின் நிழலில் நிற்காமல், நானாக சினிமாவில் தனித்து போராடி வருகிறேன்...' என்று சொல்லும் ஸ்ருதிஹாசன், 'எனக்கும் சினிமாவில் நிறையக் கனவுகள் உள்ளன...' என்கிறார். 'அந்த கனவுகளை நிறைவேற்றும் கதாபாத்திரங்களை தேடி வருகிறேன். கண் தெரியாத, காது கேட்காத, வாய் பேச முடியாத என, மாறுபட்ட வேடங்களில், உணர்வுப் பூர்வமாக நடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு வேடங்கள்...!' என்கிறார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்!

— எலீசா.

பாணியை மாற்றும் விஜய்!

பஞ்ச் டயலாக் பேசுவது, பறந்து பறந்து சண்டை போடுவது என்று, அனல் பறக்க நடித்த படங்கள், வெற்றி பெறாததால், நண்பன் படத்துக்கு பின், ரூட்டை மாற்றுகிறார் விஜய். மேலும், இனி எந்த படமாக இருந்தாலும், கதைக்கேற்ப அடக்க ஒடுக்கமாக நடிக்கவும் அவர் முடிவெடுத்திருப்பதால், சில பிரபல இயக்குனர்கள், விஜய்க்காக வித்தியாசமான கதைகள் உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

— சி.பொ.,


ஒரிஜினல் 'டிவிடி' ரெடி!

வித்யாபாலன் நடித்த, தி தர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் வசூலைவிட, அப்படத்தின் திருட்டு, 'டிவிடி' விற்பனை வசூல்தான் அதிகம். அந்த அளவுக்கு, இந்தியா முழுக்க, சக்கை போடு போட்டிருக்கிறது. இதனால், படத்தின் வசூலை அதிகப்படுத்தும் முயற்சியாக, சமீபத்தில் அப்படத்தின், 'ஒரிஜினல் டிவிடி'யை வெளியிட்டுள்ளனர். இதனால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளது.

— சினிமா பொன்னையா.

நிர்வாணமாக நடித்த சரண்யா!

காதல், பேராண்மை ஆகிய படங்களில் நடித்தவர் சரண்யா. இவர், தற்போது, மழைக்காலம் என்ற படத்துக்காக, ஒரு காட்சியில் நிர்வாணமாக, 'போஸ்' கொடுத்து நடித்துள்ளார். 'கதைப்படி, ஓவியக் கல்லூரி மாடலாக நடிப்பதால், இப்படியொரு காட்சி அவசியப்பட்டதால் நடித்தேன். கதையுடன் ஒன்றி பார்க்கும் போது, இக்காட்சி ஆபாசமாக தெரியாது; எனக்கும் அப்படித் தெரியவில்லை. அதனால் தான் துணிச்சலாக நடித்தேன்...' என்கிறார். கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!

— எலீசா.

அவ்ளோதான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us