தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காலுறைகளில் வரைந்த ஓவியம்!

காலுறைகளில் வரைந்த ஓவியம்!

காலுறைகளில் வரைந்த ஓவியம்!


PUBLISHED ON : மே 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த, இளம் பெண் ஓவியர் ஹாங் யி. வித்தியாசமான பொருட்களை கொண்டு, ஓவியங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். கூடைப்பந்து விளையாட்டுக்காக பயன்படுத்தும் பந்தை வைத்து, இவர் உருவாக்கிய ஓவியம், ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ் பெற்றது. அடுத்த முயற்சியாக, காலுறைகளை (சாக்ஸ்) பயன்படுத்தி, ஒரு ஓவியத்தை இவர் வரைந்துள்ளார். சீனாவின் பிரபல திரைப்பட இயக்குனர் யிமொய் ஷாங்கிற்கு பெருமை சேர்க்கும் வகையில், காலுறைகளை வைத்து, அவரது பிரமாண்டமான ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரைவதற்காக, 750 ஜோடி காலுறைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். சீனாவில் நடக்கும் கண்காட்சிகளில், மூங்கில் குச்சிகளில், உயரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் துணி ஓவியங்களைப் பார்த்து, இதே போன்ற வித்தியாசமான ஓவியத்தை வரைய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாக கூறும் ஹாங் யி, 'மற்ற பொருட்களை விட, காலுறைகளின் விலை, மிகவும் குறைவு. அதனால் தான், இந்த ஓவியத்தை வரைவதற்கு, காலுறைகளை தேர்வு செய்தேன்...' என, பெருமிதத்துடன் கூறுகிறார்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us