தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்.... (4)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்.... (4)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்.... (4)


PUBLISHED ON : மே 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்மூரில் பஸ், ரயிலுக்கு, ஈ மொய்க்கிற அளவிற்குக் கூட்டம் கூடும். ஆனால், விமான நிலையத்தில், பயணிகளை வழியனுப்ப வரும், கும்பல் வேண்டுமானால் அதிகமிருக்கலாம். பொருளாதார பிரச்னையால், விமானம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை, நம்நாட்டில் மிக மிகக் குறைவே.

ஆனால், அமெரிக்காவில் அப்படியில்லை. பரந்து விரிந்த... பெரிய கண்டம். 50 மாநிலங்கள். நியூயார்க்கிலிருந்து, ப்ளோரிடா பக்கம்தான்.

'எவ்ளோ நேரப் பயணம்?'

'ஜஸ்ட் பைவ் அவர்ஸ்!' இந்த அஞ்சு மணி நேரம் என்பது பஸ், ரயிலுக்கு அல்ல, விமானத்திற்கு. அந்த அளவிற்கு, அங்கு சகஜமாய் இருக்கிறது. டவுன் பஸ் அளவிற்கு விமானங்கள் பார்க் செய்யப்பட்டுள்ளன.

எனவே, குறித்த நேரத்தில் விமானத்தை எடுத்தாக வேண்டும். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும், நியூயார்க்கிலிருந்து விமானம் புறப்படுகிறது. விமானம் இதோ கிளம்பி விட்டது என்று பார்த்தால், ஊர்ந்து, திரும்பி, மடங்கி, ஓடி, தளர்ந்து, உறுமி, டேக் ஆப்பிற்கு கியூ நிற்கின்றன.

ஒன்று பறந்தபின் அடுத்தது; அப்புறம் அடுத்தது.

விமானப் பயணத்தில், நேரடி சர்வீஸ்களை விட, இறங்கி மாறிப்போகும், 'டிரான்சிஸ்ட்' என்பது ரொம்ப சாதாரணம். கட்டணத்தில் ச<லுகை, கனெக்ஷன் வசதி என்பதற்கும் அப்பால், நேரடியாக இருபது மணி நேரம், முப்பது மணி நேரம், ஒரே விமானப் பயணம் என்பது மகா அவஸ்தை...

மற்ற வெளிநாடுகளில், கனெக்டிங் விமானத்திற்காகக் கொஞ்சம் அப்படியிப்படி காத்திருந்து, அழைத்துச் செல்வதுண்டு.

இங்கு அதற்கு வாய்ப்பேயில்லை, குறித்த நேரத்தில் எடுக்காவிட்டால் போச்சு... பிறகு கியூ பெரிதாகி விடும். தவிர, ஒரு விமானம் போனாலும், அடுத்தடுத்து சர்வீஸ்கள் இருக்க வாய்ப்புள்ளதால், வரவேண்டிய பயணிகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

இதெல்லாம் நமக்கு தெரியாததால் வேண்டாத டென்ஷன்... எமிகிரேஷனில் லேட் செய்தால், அதற்கு யார் பொறுப்பு? நம் தவறா... இவர்கள் கூப்பிட்டுச் சொல்லி நிறுத்த வேண்டாமா!

யாரிடம் போய் கேட்பது? சரி போனது போய் விட்டது. நண்பருக்குத் தகவல் தெரிவிக்கலாம் என பார்த்தால், குவைத் டெலிகாம் படுத்து விட்டது.

முதலில் எமிகிரேஷன் கியூ நகர, நகர கூட்டம் சேர்ந்து கொண்டுதானிருந்தது. காலில் கடுப்பு... அதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று கும்பலில் கவனிக்க, அட... அந்த ஜில் ஜில் தம்பதி... வாரே வா... வேறு விமானம் பிடித்து வந்திருக்கின்றனர். அவர்கள் வந்தபின், அப்புறம் காத்திருப்பு... அத்தனை கசக்கவில்லை, கால் கடுப்பும் தெரியவில்லை.

எமிகிரேஷனில் வேறு எந்தக் குடைச்சலுமில்லை. படம் எடுத்து, கைரேகைகள் பதிவு செய்து, 'ஓடிப்போ...' என்று அனுப்பி விடுகின்றனர்.

வெளியே வந்து போன் செய்து விமான கனெக்ஷன் பற்றி விசாரிக்கலாம் என்று பார்த்தால், பொதுத் தொலைபேசியில், 50 செகண்ட்பேச (25 ரூபாய், மூன்று நிமிடமாம்) காசு போட வேண்டும்.

கையில் சில்லரை இல்லை. பக்கத்தில் கடைகள் இருக்கும், அங்கு ஏதாவது வாங்கினால் சில்லரை தருவர் என்று, நண்பர்கள் சொல்லியிருந்தனர். என்ன வாங்கலாம் என்று பார்த்தால், எல்லாமே மண்டையிலடிக்கிற விலை! தண்ணீர் வாங்கலாம் என்றால், அதுவும் அரை லிட்டர், 4 டாலர் அதாவது, 200 ரூபா#க்கு மேல்.

அங்கு அது ஒன்றுதான் குறைந்த விலைக்கான பொருள் என்பதால், மனதார சபித்து, வாங்கி, சில்லரை பெற வேண்டியிருந்தது.

டாலர் போனால் போகிறது, விமானத்தைப் பிடித்தாக வேண்டும்.

நண்பர் விஜய்யை போனில் பிடிக்க, 'அப்படியா... கனெக்டிங் விமானம் போயிருச்சா... கொஞ்சமிருங்க...' என்று லேப்-டாப்பில் நச்சென்று தட்டி, 'சரி பரவாயில்லை. இன்னும் ஒன்றரை மணி நேரத்தில், அடுத்த விமானம் இருக்கிறது. நீங்க கஸ்டமர் சர்வீசுக்குப் போய் விவரத்தை சொல்லுங்க. சீட்டுப் போட்டுத் தந்திருவாங்க...'

'அதுக்கு எவ்ளோ செலுத்த வேண்டும்...'

'ஒண்ணும் தேவையிருக்காது. விட்டுட்டுப் போனது அவங்க தப்புதானே! சீக்கிரம் போங்க... அங்கு எதுவும் பிரச்னைன்னா கூப்பிடுங்க...' என்றார்.

ஆனால், அங்கு எந்தப் பிரச்னையுமில்லை. 'அப்படியா... விமானம் போயிருச்சா? டோன்ட் ஒர்ரி...'' என்று அன்பொழுகப் பேசி, கம்ப்யூட்டரில் தட்டி, அடுத்த விமானத்திற்கு, போர்டிங் பாஸ் கொடுத்தனர்.

அங்கே இதெல்லாம் சகஜம்பா... எல்லாமே, 'டேக் இட் ஈசி!' தான்.

ஆனால், விமானம் புறப்படுவது, 59ம் நம்பர் கேட். நாங்களும் இந்தப் பயணம் முழுக்கப் பார்த்து விட்டோம். எங்களுக்கு அமைந்ததெல்லாம் இருப்பதிலேயே கடைசி கேட்தான். வேக வேகமாய் நடக்கணும்...

நடக்கின்றனர்...பொடிசுகள், இளசுகள் என்றில்லை... வயோதிகர்கள் கூட தெம்பாய் நடக்கின்றனர். நடக்க முடியாதவர்களுக்கு டிராலி தருகின்றனர்.

டிக்கட் எடுக்கும்போது சொல்லிவிட்டால், விமானத்தைவிட்டு இறங்கும்போதே, டிராலி தயாராய் இருக்கும். இந்த மாதிரி மனிதாபிமான சர்வீஸ்களுக்கும் சேர்த்துதான் டிக்கட்டில் காசு வாங்குகின்றனர் போலிருக்கிறது.

இந்த டிராலி விஷயம், வேறு வகையில் கூட பயன்படுத்தப்படுகிறது, நம்மவர்களால். நண்பரின் தாய், கிராமவாசி. போதுமான அளவில் ஆங்கில அறிவு இல்லாதவர். முதன் முறையாய் விமானத்தில் பயணிப்பவர். மூன்று இடங்களில் விமானம் மாறி, செக்கிங், எமிகிரேஷன் மற்றும் வண்டி புறப்படும் கேட்டை தேடிக் கண்டுபிடித்து வருவது என்பது அவருக்கு இயலாத காரியம்.

அதனால் நண்பர், டிக்கட், 'புக்' பண்ணும்போதே, தன் தாய்க்கு நடக்க முடியாது, தளர்வானவர் என்று டிராலிக்கும் சொல்லி வைத்து விட்டார். அவர் தாய், விமானத்தைவிட்டு இறங்கும்போதே... பணிப்பெண் அவரை ஏற்றிக்கொண்டு போய், அவளே எமிகிரேஷன் செக்கிங் முடித்து, உரிய கேட்டிற்கு பத்திரமாய் கொண்டுவந்து விட்டு, டாட்டா சொல்லிப் போய் விட்டார். ராஜமரியாதை...

அதனால், ஆங்கில <உபாதை, புது இடம் தெரியாத இடம் என்கிற மிரட்சியில்லாமல் சுகமாய் பயணித்திருக்கிறார்.

விமானத்தைப் பிடிக்க, யார் யாரோ நடக்கின்றனர். யாரும் யாரையும் பொருட்படுத்துவதில்லை. 'ஒரு விமானத்தை விட்டு இறங்கியதும், உடனே போர்டிங் பாசில் குறிப்பிட்டுள்ள கேட்டை கண்டுபிடித்து போய் விடுங்கள். எங்கும் தாமதிக்க வேண்டாம். சாப்பாடு, டாய்லெட் எதற்காகவும் வழியில் ஒதுங்க வேண்டாம்.

'அந்தந்த கேட்டருகே எல்லா வசதிகளும் இருக்கின்றன. அங்கு சென்றபின், பொழுது போக்கிற்காக நடக்கலாம், உறங்கலாம், கடைகளைச் சுற்றிப் பார்க்கலாம்...' என்று எழுத்தாளரும் முன்னாள் தூர்தர்ஷன் டைரக்டருமான ஏ.நடராஜன் டிப்ஸ் கொடுத்திருந்தார்.

அவர் பல நாடுகளுக்கு சென்று வந்தவர். யு.எஸ்.,க்கும் பலமுறை பயணித்து, அந்தப் பின்னணியில் பல நாவல்களும் படைத்தவர் என்பதால், புறப்படும் முன் அவரிடம் வழிகாட்டுதலுக்குச் சில தகவல்களைக் கேட்டுப் பெற்றிருந்தேன்.

'மேற்கத்திய நாடுகள் என்றால் ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா போன்றவற்றைக் குறிப்பிடுவர். இங்குள்ள கலாசாரம் ஒரே மாதிரி இருப்பதாகத் தோன்றும்.

ஆனால், உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒன்றுக்கொன்று மாறுபடும். ஆனால், 50 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந் தாலும் கூட, அமெரிக்காவின் உள்கட்டமைப்புகள் எங்கு சென்றாலும், ஒரே மாதிரி அமைக்கப் பட்டுள்ளது விசேஷம்... என்று ஏ.என் குறிப்பிட்டிருந்தார். அது உண்மை.

சென்ற இடங்களில் எல்லாம், அதைக் கவனிக்க முடிந்தது. ஏர்போர்ட், காத்திருக்கும் அறைகள், கவுன்டர்கள், கேட், அதற்குச் செல்லும் வழிகாட்டி போர்டுகள், உணவுக் கூடங்கள், ரெஸ்ட் ரூம் எல்லாமே அதே அதே...

பஸ், ரயில், சாலை அமைப்புகள், டாக்சி, போலீஸ், பிச்சைக்காரர்கள் என, எல்லாமே எங்கும் ஒரே ரகம்.

நியூயார்க்கிலிருந்து பிட்ஸ்பர்க்கிற்கு, ஒன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டும். அதற்கான விமானத்திற்குள் நுழையும்போது, அதை விமானமாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு... தள்ளு வண்டி, அதைப் பார்த்ததும் நம்மூர் ஷேர் ஆட்டோதான் ஞாபகத்திற்கு வந்தது.

நிமிர்ந்து நடந்தால் தலை இடிக்கும். ஒருக்களித்துதான் உள்ளே போக வேண்டும். கைப்பெட்டியை மேலே வைக்க இடமில்லாமல் மடியில்...

பாவிகள், குடிக்கத் தண்ணீர் கூட கண்ணில் காட்டவில்லை. பசங்கள் விளையாடும் விளையாட்டு விமானப் பயணம்.

சொல்லி வைத்த மாதிரி, அமெரிக்கா முழுக்க, எல்லா விமானத் தளங்களிலும், நடக்க வைக்கின்றனர்.

லக்கேஜுக்கு நீண்ட தூரம் நடந்து... அப்புறம் ரயில் ஏறி... அது, ஒரே தம்மில் போய் இறங்கி விடுகிறது.

அப்புறம் பளபள குகைக்குள் நாம் புகுந்து, அது காட்டும் வழியில் பயணித்து, மாடி ஏறி, அங்கு வைக்கப்பட்டிருக்கும் டைனோசர் சிலையில் வியந்து, மறுபடியும் நடந்து, 'லக்கேஜ் எந்தப் பக்கம்' என அம்புக்குறி சொன்னாலும் கூட நம்பாமல் விசாரித்து, மேலே ஏறின போது... அதே அளவிற்குப் பாதாளத்திற்கு இறங்கி, கன்வேயரை கண்டுபிடித்து காத்திருந்தால் ஏமாற்றம். அங்கு... எங்கள் பெட்டிகளைக் காணவில்லை.

தொடரும்.

என்.சி.மோகன்தாஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us