PUBLISHED ON : மே 27, 2012

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோசி இசிகுரோ என்ற விஞ்ஞானி, <அச்சு அசலாக, பெண் போல் தோற்றமளிக்கும் ஒரு ரோபோவை தயாரித்துள்ளார். ஜப்பானில், இந்த ரோபோ, ஏற்கனவே பிரபலமாகி விட்டது. இந்த பெண் ரோபோ, சில படங்களில் நடித்துள்ளதுடன், சில விளம்பர படங்களிலும், மாடலாக நடித்துள்ளது.
தற்போது ஹாங்காங் சென்றுள்ள இந்த ரோபோ, அங்குள்ள மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது. ஷாப்பிங் மால்களின் வரவேற்பறைகளில், ஆடம்பரமான சோபாவில், ஒய்யாரமாக அமர வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை பார்ப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், ஆயிரக்கணக் கானோர் குவிகின்றனர்.
இந்த பெண் ரோபோவிடம், அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா. மனிதர்களைப் போல், 65 வகையான செயல்களை இந்த ரோபோ செய்யும். சிரிப்பது, சில குறிப்பிட்ட வார்த்தைகளை பேசுவது, பாடுவது, பார்வையாளர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுத் தருவது ஆகியவை, இதில் குறிப்பிடத்தக்கவை. சில குறும்புக்கார ஹாங்காங் இளைஞர்கள், இந்த ரோபோவின் அழகில் மயங்கி, அதனிடம், 'ஐ லவ் யூ'என்று கூட, கூறியுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
— ஜோல்னா பையன்.
