PUBLISHED ON : பிப் 17, 2019

தென் மத்திய சீனாவின், சிச்சு ஆன் கான்சு மற்றும் சான்க்சி மலை பகுதிகளில் காணப்படுகிறது, பாண்டா கரடிகள்.
பாண்டாவை, சீனாவுக்குள் மட்டுமே விற்று, வாங்க முடியும். வெளிநாட்டிற்கு, ஏற்றுமதியோ, விற்பனையோ செய்ய முடியாது. மாறாக, வாடகைக்கு எடுக்கலாம்.
ஒரு ஆண்டு வாடகை, 1 மில்லியன் டாலர். அதாவது, 7 கோடி ரூபாய். குறைந்தது, 10 ஆண்டு ஒப்பந்தம் போட்டு தான், மிருககாட்சி சாலைகளுக்கு தருவர். மேலும், இதற்கு குழந்தை பிறந்து, அதுவும் வாங்கின நாட்டில் வளர்ந்தால், அதற்கு தனியாக, ஆண்டுக்கு, வாடகை தரவேண்டும்.
உலகில் உள்ள மொத்த பாண்டாக்களின் எண்ணிக்கை, 1864. மேலும், 1970களில், இது, 1,000 தான் இருந்தது. தற்போது, நல்ல முன்னேற்றம்.
பிறந்த பாண்டாவுக்கு, கண் தெரிய, 40 நாட்கள் ஆகும். அது, வளரும் இடத்திலேயே, பாண்டாவை தத்தெடுக்கலாம். ஆண்டுக்கு, 7 லட்ச ரூபாய் அன்பளிப்பு தர வேண்டும்.
இந்தியாவில், சிக்கிம் மாநில விலங்கான செங்கரடியை, பாண்டா என, தவறுதலாக முதலில் அழைத்து வந்தனர். 1901ல் தான், இப்போது, நாம் காணும் பாண்டா கண்டறியப்பட்டது.
பாண்டா, சராசரியாக, 20 ஆண்டுகள் உயிர் வாழும்; சிறந்த பராமரிப்பால், 30 ஆண்டுகள் வரை வாழும்!
- ஜோல்னாபையன்