தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்!

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்!

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்!


PUBLISHED ON : நவ 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது, பேரிக்காய். தினமும், ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

* வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியம் தேவை. இந்த சத்துக்கள், பேரிக்காயில் நிறைந்துள்ளன. எனவே, இரவு உணவுக்கு பின், ஒரு பேரிக்காய் சாப்பிடக் கொடுத்தால், குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவர்

* ரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள், சிறுநீரகத்தில் படிந்து, கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்ற, தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிடுவது நல்லது

* காய்ச்சலின் போது, பேரிக்காயை உட்கொண்டால், காய்ச்சல் குணமாகும்

* இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்

* குடல் பிரச்னைகளையும் சரிசெய்யும். மேலும், ரத்தத்தை சுத்திகரிக்கும்

* நாள்பட்ட மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தால் அவதிப்படுவோர், இதன் சாறை குடித்து வந்தால், மூட்டு வீக்கம் குறையும்

* பேரிக்காயில், காப்பர் மற்றும் வைட்டமின், 'சி' நிறைந்துள்ளது. இதை உட்கொண்டால், சூரியனின் புறஊதா கதிர்களால் செல்கள் பாதிக்கப்பட்டு ஏற்படும் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்

* உடல் மிகவும் சோர்வுடன் அல்லது ஆற்றல் இல்லாதது போல் உணரும்போது, பேரிக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள குளுக்கோஸ், உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us