
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைச்சி உண்பது பற்றி, இனிமேல் யாரும் சர்ச்சையை எழுப்ப மாட்டார்கள். ஏனெனில், இதற்கான முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. செயற்கை இறைச்சி உருவாக்க, ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது, மத்திய அரசு. அசாம் மாநிலம், கவுகாத்தி மற்றும் தெலுங்கானா மாநில தலைநகர், ஐதராபாத்தில் உள்ள நிறுவனங்கள் இணைந்து, இந்த முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. '2025க்குள், செயற்கை இறைச்சி சாப்பிட தயாராக இருங்கள்; சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களும், இந்த இறைச்சியை சாப்பிடலாம்...' என்கின்றனர், இந்த ஆராய்ச்சியாளர்கள்.
— ஜோல்னாபையன்.

