தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பிள்ளைகளை காப்பாள் பிட்டாபுரத்து அம்பாள்

பிள்ளைகளை காப்பாள் பிட்டாபுரத்து அம்பாள்

பிள்ளைகளை காப்பாள் பிட்டாபுரத்து அம்பாள்


PUBLISHED ON : மே 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 27 - நெல்லை பிட்டாபுரத்தம்மன் பிரம்மோற்சவம் ஆரம்பம்

குழந்தைகளுக்கு எப்போது என்ன நோய் தாக்குமென சொல்ல முடியாது. திடீர் திடீரென சளி பிடிக்கும், வயிற்றுப்போக்கு தலை தூக்கும். கண்கள் குத்திக் கொள்ளும். பயம் வாட்டும். அதிலும், இக்காலத்தில் குழந்தைகளுக்கு கூட, இதயநோய் மற்றும் சர்க்கரை நோ# வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில், நீங்கள் எவ்வூரில் இருந்தாலும், 'பிட்டாபுரத்தாளே, என் பிள்ளையைக் காப்பாற்று...' என, கண்ணீருடன் வேண்டுங்கள். பிள்ளைகளைக் காக்கும் கருணைக்கடலான பிட்டாபுரத்து அம்மன், உங்கள் பிள்ளையை வாழ வைப்பாள். இவளுக்கு பிரம்மோற்சவம், மே 27ல், துவங்கி, பத்து நாட்கள் நடக்கின்றன.

இந்த அம்பாளை பேச்சு வழக்கில், 'புட்டார்த்தியம்மன்' என்பர். பிட்டாபுரத்தி, வடவாயில் செல்வி, நெல்லை மாகாளி போன்ற பெயர்களும் உள்ளன. இவளது பெயர், 'பிடகாபுரத்தாள்' அல்லது 'பிடக்காபுரத்தாள்' என்று இருந்து, பிட்டாபுரத்தாளாக மருவியிருக்க வாய்ப்புள்ளது. 'பிடகன்' 'பிடக்கு' என்ற சொற்களுக்கு, வைத்தியர் என்று பொருள். குழந்தைகளின் நோய் தீர்க்கும் இந்த பெண் வைத்தியரின் கோவில், வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வடக்கு நோக்கி உள்ள அம்மன்களை, 'வடக்குவாசல் செல்வி' என அழைப்பது நெல்லை மக்களின் வழக்கம். இவளே, ஊரின் காவல் தெய்வமாக இருப்பாள். ஆறடி உயரம், நான்கடி அகலத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள். பீடத்தின் மேல், வலது காலை தூக்கி வைத்து, இடது காலை மடக்கி, வலது கையில் கீழ் நோக்கிய சூலம் வைத்து காலுக்கடியில், அசுரனுடன் கம்பீரமாக இருப்பாள்.

அம்பாளுக்கு, 'பிட்டு' நைவேத்தியம் செய்யப்படும். இவள் அனைத்து மதத்தினருக்கும், செல்லப்பிள்ளையாக விளங்குகிறாள். எல்லாருமே தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வருவர். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். விநாயகர், மாடன், மாடத்தி, பிரம்மரக்ஷி, பேச்சி, உட்பட 14 கன்னியர்கள் சன்னிதியும் உள்ளன.

பிள்ளைகளுக்கு வரக்கூடிய, 64 வகையான நோய்களுக்கு, வேர்கட்டி மை இடுவர். திருநீறு பூசி, அம்பாளின் அபிஷேக நீரைத் தெளிப்பர். குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், பெண்கள், அம்பாள் சன்னிதியை சுற்றி வருவதும் உண்டு. பிறந்த அன்றே கூட, குழந்தைகளை கோவிலுக்குள் கொண்டு வரலாம். எந்த தீட்டும் கிடையாது.

வைகாசி மாதம், 10 நாள் திருவிழாவும், கடைசி நாள் தேரோட்டமும் நடத்தப்படுகிறது. நெல்லையில் முதல் மரியாதை இவளுக்கே என்பதால், இந்த கோவிலில் திருவிழா முடிந்த பின்பே, நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா ஆரம்பமாகும். ஆடி, தை மாத கடைசி செவ்வாய் அன்று, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். கார்த்திகை தீபமும், தை மாத பத்ர தீபமும் மற்ற விழாக்கள். காலை 6 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் 9 மணி வரையிலும் அம்மனை தரிசிக்கலாம். பகல் 12 முதல் 1 மணி, இரவு 8 முதல் 9 மணிக்குள் குழந்தைகளுக்கு அபிஷேக நீர் தெளிப்பது நல்லது. திருநெல்வேலி டவுன் வடக்கு ரத வீதியும், மேல ரத வீதியும் சந்திக்கும் லாலாசத்திர முக்கின் வடக்கே உள்ளது இக்கோவில்.

***

- தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us