தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இது, நல்ல ஐடியாவா இருக்கே!

எங்கள் பகுதியில், பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவில் உண்டு. கோவில் வாசல் இருபுறமும், ஏழெட்டு பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து, பக்தர்களிடம் கையேந்தி பிச்சையெடுப்பது வழக்கம். சமீபகாலமாக, பிச்சைக்காரர்கள் ஒருவரை கூட காணமுடிவதில்லை. அதற்கு பதிலாக, வாசலின் இருபுறமும் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இது பற்றி கோவில் பணியாளர் ஒருவரிடம் விசாரித்தேன். அவர், 'அதுவா, வேற ஒண்ணுமில்லைங்க... கோவிலுக்கு புதுசா வந்திருக்கும் நிர்வாகியோட வேலைங்க... வாசல்ல பிச்சையெடுப்போர் எல்லாரையும், ஒருநாள் உள்ளே அழைத்து, 'தினமும் காலைல வந்ததும், நீங்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை செய்யணும். செஞ்சு முடிச்சிட்டு, நீங்க பிச்சையெடுக்கலாம்...'ன்னு சொல்லி, கோவிலை பெருக்குவது, தண்ணீர் தெளிப்பது, பிரகாரத்திலுள்ள கிரானைட் கற்களை சுத்தம் செய்வது என, ஒவ்வொருத்தருக்கும் ஒரு வேலையை பிரித்தும் கொடுத்தார். 'உடம்பை வளைத்து வேலை செய்ய பிடிக்காமல், அவர்கள் ஓரிரு நாட்கள் வந்து வேலை செய்தனர். நான்கு நாட்களில், ஒரேயடியாக எல்லாருமே வேறு இடம் தேடி ஓடி விட்டனர். உடனே, வாசலில் பூந்தொட்டிகள் வைத்து, மீண்டும் அங்கே யாரும் உட்காராமல் தடுத்தும் விட்டார் அந்த நிர்வாகி...' என்றார். பிச்சைக்காரர்களை விரட்டியடிக்காமல், நாசுக்காக வேலை வாங்கி அவர்களை ஒழித்துக் கட்டிய நிர்வாகியின் மதிநுட்பம் பாராட்டத்தக்கது தானே!

இதையே மற்ற கோவில்களிலும் கடைபிடிக்கலாமே!

— ஜி.சுதாகரன், பசுமலை.

தவறை உணர்த்திய கணவர்!

தினமும் இரவு, 7:00 மணி முதல் 10:00 மணி வரை, நானும், என் மாமியாரும் சேர்ந்து, தொடர்ந்து பல சீரியல்களை, 'டிவி'யில் பார்ப்பது வாடிக்கை. அப்படி ஒரு நாள் சீரியல் பார்த்து, அழுது கொண்டிருக்கையில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண் வந்து, அவள் குழந்தைக்கு பால் வேண்டுமென்று கேட்டாள். ஊருக்குப் போய்விட்டு வர தாமதமாகி, விட்டது என்றும், கடையில், 'ப்ரிஜ்ஜில்' வைத்த ஐஸ் பால் வாங்கிக் கொடுத்தால், சளிப்பிடித்து, தொந்தரவாகி விடும் என்றும், அவள் கூறவே, <உடனே நான் எழுந்து பாலை எடுத்து வர, அடுப்படியை நோக்கிக் கிளம்பினேன்; என்னைத் தடுத்த என் மாமியார், 'வீட்ல விளக்கு வச்ச பிறகு, எதையும் வெளியாட்களுக்கு கொடுக்கக் கூடாது; அதுவும் முக்கியமாக பாலை கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், நம் செல்வம் எல்லாம் போய், தரித்திரம் வந்து குடியேறும்...' என்றார்.

நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது, என் கணவர் எழுந்து பாலை எடுத்து வந்து, விளக்கு வச்ச பிறகு வீட்ல அழவே கூடாது, நீங்க ரெண்டு பேரும், 'டிவி' யில சீரியல் பார்த்து, பல வருடமா அதைத்தான் செய்றீங்க. அதுல வராத தரித்திரம், பசியில அழுற பச்சைக் குழந்தைக்கு பால் கொடுக்குறதால கட்டாயம் வராது. இப்ப நாம பாலைக் கொடுக்கலேன்னா, அதுதான் பாவம்...' என்று சொல்லி, அந்தப் பெண்ணிடம் பாலைக் கொடுத்து அனுப்பினார்.

அவரது பேச்சு, என்னை சாட்டையால் அடித்தது போல இருந்தது.

பேச்சிழந்து மவுனமானார் என் மாமியார்.

— ராமலட்சுமி பேச்சியப்பன், ராஜபாளையம்.

தேவை, இதுபோன்ற நிகழ்ச்சிகள்!

எங்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. சென்ற வாரம், என் மனைவியின் மாமா - அத்தைக்கு திருமணம் முடிந்து, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அவர்கள் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறி, எங்களை அழைத்தனர். விழாவிற்கு நாங்களும், எங்களைப் போன்று சமீபத்தில் திருமணம் முடித்த இரண்டு புதுமண தம்பதியரும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். என் மனைவியின் மாமா - அத்தை பேசுகையில், 25 ஆண்டுகாலம் தங்கள் வாழ்வில், எவ்வாறு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்து வாழ்ந்து வருகிறோம் என்பதையும், தங்கள் வாழ்வில் ஏற்பட்ட இன்ப- துன்ப நிகழ்வுகளில், எவ்வாறு ஒருவருக்கொருவர் பாராட்டும், ஆறுதலும் தெரிவித்துக் கொள்வர் போன்ற பல விஷயங்களையும் எங்களுக்கு கூறினர். இதைக் கேட்ட எங்களுக்கும், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, எவ்வாறு வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும் என்பது தெளிவானது. விவாகரத்து அதிகம் நடைபெறும் இக்காலத்தில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அதில் புதுமணத் தம்பதியரை பங்கேற்க செய்தால், நம் இந்திய பாரம்பரிய திருமண பந்தமும், பண்பாடும் நீடித்து நிலைத்து நிற்கும் என்பது நிச்சயம்.

— க.சிவகுமார், மடத்துக்குளம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us