PUBLISHED ON : செப் 12, 2021

அ நிறம் | அளவு
கற்பின்
அருமை பெருமை
துரோகம் வஞ்சகம்
ஏமாற்றப்பட்டது
எல்லாம்...
ஐந்து ஆண்டுகள்
பழகி குடும்பம்
நடத்திய பின் தான்
தெரிய வருகிறது
படித்த நல்ல
வேலையில் இருக்கும்
சில பெண்களுக்கு...
சில மாணவியருக்கு
பள்ளியில் படித்து
வெளியேறி
திருமணமாகி
குழந்தை குட்டி
பெற்ற பின் தான்
நினைவிற்கு வருகிறது
பள்ளியில் நடந்த
பாலியல் சீண்டல்கள்...
ஆண்டாண்டு காலமாய்
ஆக்கிரமித்து
அனுபவித்து வரும்
கோவில் நிலங்கள்
கடைகள், கட்டடங்கள்
சோதனையின் போதுதான்
கண்டுபிடிக்கப்படுகின்றன
புதிய அதிகாரிகளால்...
காலம் கடந்த பிறகே
முன்னாள், இந்நாள்
ஆட்சியாளர்கள் வழக்கைச்
சந்திக்கின்றனர்...
காலம் பலரை ஏமாற்றி
திருத்தி விடுகிறது...
சிலரை மாற்ற முடியாமல்
விட்டு விடுகிறது
அவர்கள் காலம் வரை!
சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.
