தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 29, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நட்பா காதலா?

* உன்னைக்

காணும்

ஒவ்வொரு

வேளையிலும்,

பட்டாம்பூச்சியின்

சிறகெனப்

பட படக்கும்

என் இதயத்

துடிப்பை, நான்

எண்ணும்

போதெல்லாம்...

* வாய் திறக்கும்

போதெல்லாம்

உன் பெயரை

மட்டுமே

உச்சரிக்கத்

துடிக்கும், என்

நாவினை

கட்டுப்படுத்த,

என் உதடுகளை

கடித்துக்

கொள்ளும்

போதெல்லாம்...

* எண்ணிலா

நண்பர்கள்

என்னோடு

பேசினாலும்,

உன் குரலை

மட்டும்,

விசேஷ

ஒலியால்,

உணர்த்தி,

என்னை

உலுக்கிடும்

செல்பேசி...

சிணுங்கும்

போதெல்லாம்...

* பிறந்த நாள்

பரிசுகளில்...

பத்திரமாய்

பாதுகாக்கும், உன்

கையெழுத்திட்ட

வாழ்த்து அட்டையை

வாசிக்கும்

போதெல்லாம்...

* கல்லூரி ஆண்டு

விழாவில்,

கடைசியாய்

வந்த நீ,

அழுத்தமாய் தந்த

அந்தப் ஸ்பரிசத்தை

அடிக்கடி நான்

அனுபவிக்கும் போதெல்லாம்...

* நண்பரோடு சென்ற

சுற்றுலாவில்,

என் தோளில்

உன் கைபோட்டு,

மோனாலிசாவென

புன்னகை சிந்தும்,

புகைப்படத்தை,

நான் பார்க்கும்

போதெல்லாம்...

* நட்பு தான் என

நம்பினாலும்,

காதலாய்

இருக்குமோ எனக்

கலங்கும், என்

பெற்றோரிடம் -

கண்டிப்பாய் நான்

பதில் சொல்ல

வேண்டும்...

* சொல்...

நமக்குள்

இருப்பது,

நட்பா,

காதலா?

கு.மா.பா.கபிலன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us