தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 30, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழித்துக் கொள்!

* இளைய சமுதாயமே...

வெறுப்பு முகமூடி

அணிந்து

யாரைப் பார்த்தாலும்

எதிரியாய்...

* அண்ணனே

அன்னியனாய்...

தம்பியே

பகைவனாய்...

உறவே

பகையாக...

இல்லம்

போர்க்களமாய்...

உலகம்

சூன்யமாய் தெரிகிறது!

* மனது வெம்பி...

சூழ்நிலைக் கைதியாய்

நான்கு சுவருக்குள்

முடங்கச் செய்கிறது!

* நம்பிக்கையற்று

ஜீவனற்று

முதுகெலும்பற்று

வாழ்க்கை இழந்து

வீழச் செய்கிறது!

* இளைய சமுதாயமே...

இனியாவது

விழித்துக் கொள்...

அன்பு அரிதாரம் பூசி

யாரைப் பார்த்தாலும்

நண்பனாய்...

* அன்னியனே

அண்ணனாய்...

பகைவனே

தம்பியாய்...

பகையே

உறவாய்...

* போர்க்களம், சூன்யம்

எல்லாம் மாறி

தன்னம்பிக்கையுடன்

ஜீவனுடன்

புத்துணர்ச்சியாய்

புறப்பட வைக்கும்!

* இளைய சமுதாயமே...

நேசிக்க கற்றுக் கொள்

மன்னிக்க கற்றுக் கொள்

பொறுமை காக்க

கற்றுக் கொள்

இதுவே வாழ்வின்

மந்திரங்கள்!

* அன்பு —

எதிரியையும்

பணிய வைக்கும்!

* இளைய சமுதாயமே...

விழித்து கொள்

வெறுப்பு முகமூடி

அணிந்து...

எதிரில், எதிரியாய்

நின்று சாதிப்பதை விட...

* அன்பு முகம் காட்டி

ஆதரவாய் அருகில்

நின்று சாதிப்பதே எளிது!

* இளைய சமுதாயமே...

விழித்துக் கொள்!

— கவிதா வீராசுவாமி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us