தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குளித்தபடி படம் பார்க்கலாம்!

குளித்தபடி படம் பார்க்கலாம்!

குளித்தபடி படம் பார்க்கலாம்!


PUBLISHED ON : செப் 30, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சினிமா பார்ப்பதற்கு, தியேட்டர் களுக்கு தான் செல்ல வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். வெது, வெதுப்பான தண்ணீருக்குள் குளித்த படி படம் பார்க்கலாம்...' என, அழைக்கிறது ஒரு நிறுவனம். லண்டனில் உள்ள பூங்கா ஒன்றை விலைக்கு வாங்கி, திறந்த வெளி தியேட்டரை கட்டியுள்ளது, இந்த நிறுவனம்.

இந்த பூங்காவில், ஆங்காங்கே, போதிய இடைவெளிகளில், பத்துக்கும் மேற்பட்ட, தண்ணீர் தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன. இவற்றில், வெதுவெதுப்பான, சுடு நீர் நிரப்பப்படும். இந்த தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்தபடியே, பூங்காவின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திரையில் ஒளிபரப்பப்படும், படங்களை பார்த்து ரசிக்கலாம்.

தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்தபடியோ, குளித்தபடியோ, ஆட்டம் போட்டபடியோ படத்தை ரசிக்கலாம். இந்த வித்தியாசமான தியேட்டரில், படம் பார்ப்பதற்கு, நபர் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பிறந்த நாள், திருமண நாளுக்காக அளிக்கப்படும் விருந்துகளுக்கும், இந்த தியேட்டர், முன் கூட்டியே ரிசர்வ் செய்யப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் குளியலுடன், படம் பார்த்து ஜமாய்க்கின்றனர், லண்டன் இளைஞர்கள்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us