PUBLISHED ON : அக் 07, 2012

அ நிறம் | அளவு
அடையாளம்!
* வாழவே பிடிக்கவில்லை
இவ்வுலகில்...
தற்கொலை எண்ணம்
அவ்வப்போது
தலையெடுக்கிறது...
* வழிப்பறி திருட்டு
பாலியல் பலாத்காரம்
நயவஞ்சகம் துரோகம்...
* ஆள் கடத்தல்
லஞ்ச ஊழல்
சொத்துக் குவிப்பு...
* தீவிரவாதம் வன்முறை
அநாகரிக அரசியல்
போலியான மதவாதிகள்
நடிப்பை நம்பும் இளைஞர்கள்...
* அராஜகம் ரவுடித்தனம்
மாற்ற முடியாத
குடி மக்கள்...
கண்மூடித்தனமான
கட்சித் தொண்டர்கள்...
* கட்டுப்படுத்த முடியாத
வாகன விபத்துக்கள்
சீரழியும் சுற்றுப்புற
சுகாதாரம்...
* சோம்பேறித்தனத்தை
வளர்க்கும் இலவசங்கள்...
பலனில்லாமல் பாழாகும்
மக்கள் பணம்...
* தனி மனிதனால் எதையும்
மாற்ற முடியாது எனினும்
வாழ்ந்து தொலைக்க
வேண்டியிருக்கிறது... 'இப்படியும் ஒரு
நல்லவன்...?' என அடையாளம் காட்ட!
—சொல்கேளான் ஏ.வி.கிரி,தாம்பரம்.
