sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 24, 2013

Google News

PUBLISHED ON : மார் 24, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தத் தாலாட்டு!

* தூளி இல்லாமல்

தொட்டில் சேலையில்லாமல்

தூங்க வைக்கிறது

இந்தத் தாலாட்டு!

* விழித்துக் கொண்டே

உறங்க வைக்கும்

ஒரு வித்தையைச் செய்கிறது

இந்தத் தாலாட்டு!

* நடந்து கொண்டும்

உட்கார்ந்து கொண்டும்

படுத்துக் கொண்டும்

ரசிக்க வைக்கிறது

இந்தத் தாலாட்டு!

* உத்திரத்தில்

பொம்மை இல்லை

ஒய்யார பூக்களில்லை

அப்படியும் அசத்துகிறது

இந்தத் தாலாட்டு!

* செல்லாக் காசுகளையும்

மெல்லக் கிடத்தி

மன்னராக்கி விடுகிறது

இந்தத் தாலாட்டு!

* மன்னர்களைக் கூட சில சமயம்

மண்ணைக் கவ்வ வைத்து விடுகிறது

இந்தத் தாலாட்டு!

* அன்னையர் பொதுவாக

ஏற்பதுமில்லை

இசைப்பதுமில்லை

இந்தத் தாலாட்டு!

* அடுத்தவர்கள் அதரங்களால்

அர்ச்சிக்கப்படுவதே

இந்தத் தாலாட்டு!

* பகல் தூக்கத்திற்காகவே

பாடப்படுகிறது

இந்தத் தாலாட்டு!

* இதில்-

பகடையாக்கப்படுவது

களைப்பு அல்ல

பலபேரின் பிழைப்பு!

* உறக்கத்திற்கு ஒரு தாலாட்டு என்றால்

மயக்கத்திற்காகவே இந்தத் தாலாட்டு...

இதற்கு-

புகழ் என்று மற்றொரு பெயரும் உண்டு!

வே.சின்னத்தம்பி, திருச்சி.






      Dinamalar
      Follow us