
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காதலும் கற்றுமற!
* சாதாரணமாயிரு...
காதலானாலும்
கானலானாலும்!
* நீயழுவதை
விட
பிரிந்தவர் அழுவதே
காதல் வெற்றி!
* திசை மாறுவதே
காதலிலும்,
புயலிலும்
இயற்கை!
* தோற்றால்
துவளாமல்
காதலும் கற்றோமெனத்
துள்ளலாம்!
* காமமாய்
காதலித்தவருக்கு
துரோகமிழைத்தல்
சுலபமே!
* மனதைப்
பறித்தவளுக்காய்,
வாழ்வை
விட்டுக் கொடுத்தலும்
காதல்தான்!
* ஆக,
காதலும்
கற்று
மணக்கலாம்...
கலைந்தால்
மறக்கலாம்!
— ச.பிரசன்னா.