/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!
/
புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!
PUBLISHED ON : ஏப் 28, 2013

மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கோனில், புகழ் பெற்ற வன விலங்கு சரணாலயம் உள்ளது. இங்கிருந்த பெண் புலி ஒன்று, இரு குட்டிகளை ஈன்றது. பின், சில நாட்களில் இறந்து விட்டதால், தாய் இல்லாமல் தவித்து போன இரு குட்டிப் புலிகளுக்கும், உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
வன விலங்கு அதிகாரிகள், புலி குட்டிகளுக்கு, புட்டி மூலம் பால் புகட்டிப் பார்த்தனர்... ஆனால், அவை குடிக்கவில்லை. இதனால், இரண்டு புலி குட்டிகளும் இறக்கும் நிலைக்கு வந்தன. இதையறிந்த, பர்மாவை சேர்ந்த, ஹியா ஹிடாய் என்ற 40 வயது பெண், அந்த குட்டிகளுக்கு பாலூட்ட முன் வந்தார். வன விலங்கு அதிகாரிகளிடம் இதை தெரிவித்ததும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது, இரண்டு குட்டிப் புலிகளையும், தன் பிள்ளைகளைப் போல் பாவித்து,பாலூட்டி வருகிறார் அந்தப் பெண்.
அவர் கூறுகையில்,'புலிக் குட்டிகளுக்கு பாலூட்டுவது, என் மனதுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது. ஆனாலும், அந்த இரண்டு குட்டிகளுக்கும், பற்கள் முளைக்கும் வரை தான், பாலூட்ட முடியும்...' என்றார்.
— ஜோல்னா பையன்.