sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 16, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 16, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னியுங்கள் அப்பா!

* அன்றைய நிகழ்வுகள்

இன்றும் முழுமையாய்

பசுமரத்தாணி போல்

நினைவுகளாய் பதிந்திருக்கிறது!

* சுண்டு விரல் பிடித்து

தெரு இறங்குகையில்

நண்பனாகத்தான் தெரிவார்

என் அப்பா!

* புத்தகங்களைப்

புரிய வைப்பதில்

கதைகளாய் நீளுமவர்

வார்த்தைகள்!

* சிக்கனம் என்றாலே

சொல்லிலும்

செயலிலும் தேவை

இக்கணம் என்பார்!

* சுத்தத்தில் சுகம் காணும்

சூத்திரம் சொல்லும் போது

சத்தமாய் கத்தத் தோன்றும்

இவர் என்

அப்பாவாக்குமென்று!

* அவரின் ஆறடி உயரத்தை

அரையடியாக்கி, முதுகில்

குதிரை ஓட்டுகையில்

மூட்டு வலியை மட்டும்

முனகலிலும் சொன்னதில்லை!

* குதிரை சவாரி

சைக்கிளாக மாறிய போது...

எனது பாவாடை சட்டையும்

சுடிதார், ஜீன்ஸ் ஆனது!

* எனது நிறம் பொருந்திய

ஆடைத் தேர்வில்

மேட்சிங் அணிகலன்களிலென

அப்பாவின் பங்கு

ஐம்பது கடைகள் தாண்டும்!

* 'சுற்றமும் நட்பும் சூழ' என

எனதழைப்பிதழைப்

படிக்கும் போது மட்டும்

ஏனோ எனக்குத் தெரியாமல்

விழி ஈரம் துடைக்கும் அப்பா!

* மாதமொருமுறை என்

வீடு வந்து திரும்பும் போது

'எல்லாம் நன்றாகத்தானே

போய் கொண்டிருக்கிறது'

என ஆயிரத்தொன்றாவது

முறையும் சளைக்காமல்

என் பார்வைகளில்

பதில் தேடும் அப்பா!

* எந்தப் பிரச்னைகளுக்கும்

பொறுமையில் வழி தேடி

நிதானத்தில் வெற்றிகொள்ளச்

சொல்லும் என் செல்ல அப்பா!

* வயதான உங்கள்

தேவைகளை கேட்கத் தவறியதால்

முழுவதும் தவறவிட்டு

இப்போது விழிநீரில்

பரிதவிக்க வைக்கும்

அன்பு அப்பா எங்களை

மன்னிப்பீரா அப்பா!

எஸ்.ரகு, திருப்பூர்.






      Dinamalar
      Follow us