PUBLISHED ON : ஆக 11, 2013

அ நிறம் | அளவு
சுதந்திர சிறகுகள்
* நம் சிறகுகள்
பிறர் பறப்பதற்கா?
நம் சுதந்திரம்
பிறர் ஆள்வதற்கா?
* இளைஞர்களே...
சிந்தனைச் சிறகுகள்
காதல் சிறையிலே
பூட்டிடவோ!
* சிறுவர்களே...
வசந்தச் சிறகுகள்
திரை அரங்கிலே
தொலைத்திடவோ!
* தாய்மார்களே...
கூர்மதி சிறகுகள்
சின்னத் திரைச் சீரியலிலே
சிதைத்திடவோ!
* வாக்காளர்களே...
வாக்குச் சிறகுகள்
அரசியல்வாதியிடம்
வாடகைக்கு விட்டிடவோ!
* பாட்டாளி தோழரே...
உழைப்பு சிறகுகள்
பண முதலையிடம்
அடகு வைத்திடவோ!
* பட்டதாரிகளே...
திறமைச் சிறகுகள்
பன்னாட்டு திமிங்கலத்திடம்
பறிகொடுத்திடவோ!
* இன்னும் இன்னும்
உதிர்ந்திட்ட
நம் சிறகுகளோ
ஏராளம் ஏராளம்!
* இனியாவது...
பெற்ற சுதந்திரத்திற்கான இனிப்போடு
பெற வேண்டிய சுதந்திரத்திற்கான
கண்ணீரையும் பிரசவிப்போம்!
* உயரட்டும்
தேசியக் கொடியோடு
நமது சிறகுகளும்
சுதந்திரமாய்!
— பெ.பாண்டு, சிவகாசி.
