தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை

கவிதைச்சோலை

கவிதைச்சோலை


PUBLISHED ON : செப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காக்கிப் பூக்கள்....!

* நாங்கள்

காக்கிப் பூக்கள்...

வியர்வையில்

வளரும்

வாடா மலர்கள்!

* சூரியனில் வியர்த்தும்

நிலவினில் குளித்தும்

எப்போதும் மின்னும்

நட்சத்திரங்கள் நாங்கள்!

* தீமைகளை அழித்து

நன்மைகளை காத்து

புது உலகம் படைக்கும்

முத்தொழில் எமக்குண்டு!

* பன்முனைத் தாக்குதலும்

பணிச்சுமையும்

கூடினாலும்,

கடமை என்ற

காற்றை தேக்கி

வடிவம் இழக்காத

பந்துகள் நாங்கள்!

* காவல் வாழ்வில்

எந்த நிமிடமும்

எந்த நிகழ்வும்

எங்கள்

கையில் இல்லை...

ஆனால்,

எல்லா நிகழ்வுகளிலும்

எல்லா நிமிடங்களிலும்

நாங்கள்

இருக்கிறோம்!

* உடற்சோர்வும்

மனச்சோர்வும்

எமக்கும் உண்டு...

அப்போதெல்லாம்

நீதி கிடைக்கப் பெற்ற

ஏழைகளின்

ஆனந்தக் கண்ணீரும்,

நிதி கிடைக்கப் பெற்ற

ஏமாந்தவர்களின்

வாழ்த்துக் கண்ணீரும்,

இனிதாய் முடிந்திட்ட

விழாக்களும்,

சீராக போகிற

போக்குவரத்தும்

குற்றம் இல்லாமல்

கழியும் இரவும் பகலும்

எமக்குப் புத்துணர்வூட்டி

பூரிப்புக் கொள்ள வைக்கும்!

* எல்லாருக்கும் நாங்கள்...

எல்லாவற்றுக்கும்

நாங்கள்!

* இந்த

காக்கிப் பூக்கள்

பூமியைக் காக்கும்

பூவேலிகள்!



— மருத்துவர் ரா. சிவகுமார்,

காவல் துணை ஆணையாளர்,

மத்திய பிரிவு,சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us