
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேடலில் தான்...
தேடாமல் எதுவும்
கிடைப்பதில்லை...
தட்டாமல் எதுவும்
திறப்பது இல்லை!
தேடாமலும், தட்டாமலும்
எளிதாய் எதுவும் கிடைத்தால்...
வாழ்க்கை சுவாரஸ்யம் அற்று
வதங்கிப் போய்விடும்!
வரங்களை வேண்டி
இறைவனிடம் கைநீட்டுபவனை விட...
விரல்கள் பத்தையும்
மூலதனமாக்கி, உழைப்பவன்
முழுமைப் பெறுகிறான்!
முயற்சியற்று வீணே
முடங்கிப் கிடப்பவனை...
சோம்பல் சிறைப்பிடிக்கிறது...
நம்பிக்கைக் கொண்டு
நகர்ந்து செல்பவனைத் தேடி
வெற்றி
மாலை இடுகிறது!
சரித்திரம் படைப்பவனும்
சாதிக்கத் துடிப்பவனும்
சறுக்கி வீழ்வதில்லை...
அவமானங்களை ஒதுக்கித் தள்ளி
அதிலிருந்து எழுகிறவன்
தோல்வியே அடைவதில்லை!
தூரத்தில் என்பதில்லை...
காலடியில் கூட கிடைக்கலாம்
தேடுவோம்... தேடுவோம்...
தேடலில் தான் வாழ்க்கை!
— கருமலைப் பழம் நீ, சென்னை.

