PUBLISHED ON : மே 11, 2014

அ நிறம் | அளவு
ஒரு நாள் போதுமா?
அன்பு ஊற்றுக்கு
இன்று அடையாள தினம்...
அடுத்த தலைமுறையை
உருவாக்கி, அறப்பணியாற்றும்
அன்னைக்கு ஒரு தினம்!
மங்கல நாண்
அணிந்த முதல் நாளாக,
சுற்றங்களின் விதவிதமான
வினாக்களுக்கு விடை சொல்லியே
களைத்துப் போனாலும்,
கருக்கொண்ட நொடியிலேயே
துள்ளும் பெண்மை
உவகைத் தாய்மையாய் உருக்கொள்ளும்!
ஐயிரண்டு திங்கள்
அடிவயிற்றில் அடை காத்து,
சிசுவின் செல்ல உதைகளை
சுகமாய் உள்வாங்கி,
தழும்புகள் பதியும் வரை
பிரசவத்துயருற்று
குருதியை உணவாய்
ஈதலே தாய்மைச் சிறப்பு!
ஈந்தளித்த தாய் மனதை
இருகரம் கூப்பி
வணங்குதல் இயல்பே...
ஆனால்,
வணங்குவதற்கு ஒரு நாள் போதுமா!
— ஏகலைவன், சன்னியாசிகுண்டு.
