தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புரியத்தான் செய்கிறது!

இரவை

பகலாக்க நினைத்து,

பகலையும்

இரவாக்கி விட்டோம்...

சாளரங்களில்லாத

அறைகளோடு

அடுக்ககம் அமைத்து!

பேஸ்புக்கில்

ஆயிரமாயிரம்

நண்பர்கள் இருந்தும்,

பேசிப் பழகவில்லை

இன்னும் அடுத்த வீட்டாரிடம்!

விளைவுகள் தெரிந்தும்,

விளை நிலத்தை

விற்பனைக்கு என

விளம்பரம்

செய்கிறோம்...

விதைநெல்லை

வேக வைத்து தின்பதென்ற

அறியாமையை

பழமொழியாய்ச்

சொல்லிக் கொண்டு!

மக்கிப் போவதை மட்டுமே

உற்பத்தி செய்ய வேண்டுமென்ற

உண்மை,

மக்கிப் போகாத

மண்ணுக்குத் தெரிந்திருந்தும்,

மக்கிப் போகாத குப்பையை

உருவாக்கிக்

கொண்டிருக்கிறோம்...

மண்ணோடு மண்ணாய்

மக்கிப் போகவிருக்கும்

நாம்!

நீர் நடந்து சென்ற

பாதையில்

நீயும், நானும் இனி

தாகத்துடன்

நடக்க வேண்டியிருக்கும்

என்பது, புரியத் தான் செய்கிறது...

இருந்தும்...

அரைகுறை உடை

பழகிவிட்டது போல,

ஆடையில்லாத மேனியையும்,

நியாயப்படுத்த

வழி தேடுகிறோம்...

ஆதி உடை அதுவென்ற

காரணம் மட்டும்

போதுமா போதாதா

என்பதாய்!

— என்.ரமேஷ், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us