PUBLISHED ON : செப் 07, 2014

அ நிறம் | அளவு
ஒரு பெண்ணின் கதை!
* கல்லூரிப் படிப்பின் போதும்
அரசுப் பணி கிடைத்துவிட்ட போதும்
எனக்கு விதிக்கப்பட்டது
பஸ் பயணம் தான்!
* படிகளில் நெரிசலில்
ஏறி, இறங்கும் போது
வக்கிரங்களின் உராய்வு
அருவருப்பாயிருந்தது வெகுநாள் வரை...
இன்றோ மரத்து விட்டது!
* பயண நேரத்தில் கை உயர்த்தி
கம்பியை பிடித்திருப்போரின்
அக்குள் வியர்வை நாற்றம்
குமட்டியதெல்லாம் ஒரு காலம்...
இன்று, பொருட்படுத்துவதேயில்லை!
* கறுப்புப் கண்ணாடிக்குள்
உச்சி முதல் பாதம் வரை
காமக்கண்கள்
பதித்த கண் வடுக்கள்
அநேகம்!
* பெண் பார்க்கும் சாக்கில்
மனதாலும், கண்களாலும்
கற்பழித்துப் போனார்கள்!
* இயற்கைக்குத்தான் என்மீது
எவ்வளவு ப்ரியம்...
'அந்த' நாட்களிலிருந்து எனக்கு
நிரந்தர விடுதலை!
* சவுந்தர்யமும் கிருஷ்ணபட்ச
நிலவாகி விட்டால்
நான் சவுக்கியமாய் வாழலாம்
சொச்சகாலம்!
— சாய், மதுரை.
