தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 04, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துணிவே துணை!

சுவைப்பதற்கும், உமிழ்வதற்கும்

உயிருடன் உலவும்

நா ஒன்றுள்ளது!

வானில் பறப்பதற்கும்

மண்ணில் நிலைப்பதற்கும்

எல்லையில்லா உயரங்கள்

கனவுச்சிறகுகளால்

பின்னப்பட்டுள்ளன!

மறப்பதற்கும்

நல்லதை நினைப்பதற்கும்

எண்ணிலடங்கா

காரண விதைகளை

மனப்பறவை - இதயத்துள்

மறைத்துள்ளது!

வீழ்வதற்கும், வாழ்வதற்கும்

வீறுகொண்டு எழுவதற்கும்

உறுதி கொண்ட கால்கள்

புத்தியெங்கும்

புதிதாய் முளைவிட்டுள்ளது!

அழுகையும், சிரிப்புமான

செயற்பெருங்கடலின்

அலைகளில் மிதந்து நெஞ்சம்

ஆர்ப்பரித்துக் கொண்டுள்ளது!

விட்டு விலகுதலுக்கும்

கட்டி அணைப்பதற்கும்

பாசக் கயிறென இரு கரங்கள்

துடித்துக் கொண்டுள்ளன!

அன்பைச் சுவைப்பதற்கும்

வம்பைச் சுமப்பதற்கும்

நெஞ்சுக்குள் நிற்காத

கடிகாரமாய் இதயம்

துடித்துக் கொண்டுள்ளது!

இனி எதற்கு

வீழ்ச்சியின் விளிம்புகளில்

விளக்கொளியின்

தேடல்கள்!

நம்மால் தொட முடியும்

சிகரங்களை

சீர்தூக்கத் தெரிந்தால்

மறுப்பின்றி ஒட்டிக்கொள்ளும்

துணிவே துணையாக!

செல்லம் ரகு,

திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us