PUBLISHED ON : ஏப் 12, 2015

அ நிறம் | அளவு
கண்ணீரை சேமி!
கூர்வாள் பேச்சுக்கள்
அடிபணிய வைக்கும்
அதிகாரங்கள்
ரத்தக் கண்ணீர் வரவழைத்து
சித்தத்தையே கலங்கடிக்கும்!
கண்ணீரை
துடைத்தெறிந்தால் மட்டுமே
தடைகளும், துன்பங்களும்
உடையும்!
கண்ணீரில் எந்தக்
கவலையும் கரைவதில்லை!
எல்லாம் இருப்பதற்காக
ஆனந்தப்படவும் வேண்டாம்
அதையெல்லாம் இழந்ததற்காக
அழுதிடவும் வேண்டாம்!
நம்பிக்கைப்பலம்
உள்ளோர்க்கு
கன்னத்தில் நீர் வழிவது
நின்று விடும்!
தன்னைத்தானே செதுக்கும்
சிற்பிக்கு மட்டுமே
கண்ணீருக்கு விடுமுறை
கொடுக்க தெரியும்!
ஆரா ரணங்களின் போது
அழுது விட்டால்
மனம் ஆறுதலடையும்
என்பது ஐதீகம்!
அதனால்...
காசை மட்டுமல்ல
கண்ணீரையும் சேமியுங்கள்!
— ரா. கலாராணி,
சிவகாசி.
