
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலமறிந்து செயல்படு!
காலம் கடிவாளமில்லாத குதிரை
நாம் நினைத்தால்
அதற்கு கடிவாளமிட்டு
அடக்க முடியும்!
காலத்தை கண்ணாடியாக்கி
தன் முகத்தைப்
பார்ப்பவனால் மட்டுமே
துன்பக்கடலிலிருந்து
கரைசேர முடிகிறது!
காலத்தை பயன்படுத்துவோரால்
மட்டுமே
மகத்தான காரியங்களை
சாதிக்க முடிகிறது!
காலம் யானை தான்...
அதையடக்கும் அங்குசம்
நம்மிடமே உள்ளது!
தன்னை மதியாதவரை
காலம்
மிதித்துவிட்டுப் போகிறது!
அதன் அருமையை
உணர்ந்து செயல்படும் போது
வெற்றிகள் தேடிவருகிறது!
நம் லட்சியப் பயணத்தை
காலத்தோடு கைகோர்த்து
தொடங்கினால் நிச்சயம்
வெற்றிவாகை சூடலாம்!
— ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

