
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முரண்!
கொடிய விஷம் கொண்ட
பாம்பை நல்ல பாம்பு
என்பர்!
பட்டப்படிப்பிற்கு பல லட்சம்
வாங்கினால் கல்வித் தந்தை
என்பர்!
உடம்பு நோகாத கதாநாயகனுக்காக
உடலை வருத்தி, 'ஸ்டன்ட்' அடித்தால்
டூப்பு என்பர்!
கட்சி கொடுக்கும் லட்சத்திற்காக
தீக்குளித்தால்
தியாகி என்பர்!
கடவுளைக் கண்டேன் என
சாதுவேடம் பூண்டால்
மகான் என்பர்!
அரை வயிறு கஞ்சி குடிக்கும்
விவசாயியை பார்த்து
குடிமக்கள் என்பர்!
இப்படிப் பல முரண்களை
பட்டியலிட்டு எழுதினால்
கவிதைக்கு, பொய்யழகு என்பர்!
சொல்கேளான் ஏ.வி.கிரி.
சென்னை.