
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொர்க்கமும், நரகமும்!
நேர்மையாய் வாழ்வதற்காக
பெருமை கொள்ளுங்கள்!
கருணையோடு வாழ்வதற்காக
கர்வம் கொள்ளுங்கள்!
விட்டுக் கொடுத்து வாழ்வதற்காக
மனதை விசாலப்படுத்திக்
கொள்ளுங்கள்!
அன்புடன் வாழ்வதற்காக
ஆனந்தம் கொள்ளுங்கள்!
பொறுமையை கடைபிடிப்பதால்
பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்!
நிரந்தர நிம்மதி
நிலைத்திருக்கும் சொர்க்கவாசல்
உங்களுக்காகவே
நாள் முழுவமும்
திறந்திருக்கும்!
எதிர்மறை வழிகளில்
வாழ்பவனுக்கு நித்தமும்
ரொக்கம் கொட்டும்!
நிம்மதியும், அமைதியும்
ஆனந்தமும் இவர்களுக்கு
'திரிசங்கு சொர்க்கம்' தான்!
நரகத்தின் வாசல்களே
இவர்களுக்கு திறந்திருக்கும்!
சொர்க்கமும், நரகமும்
நம் கைகளில்
நம் செயல்களில் தான்
மறைந்துள்ளது!
— எம்.ஆர்.ஜெயச்சந்திரன்,
திண்டுக்கல்.

