PUBLISHED ON : ஆக 30, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகில், முதன் முதலாக ஜனநாயக முறைப்படி, ஆட்சி அமைத்த நாடு கிரீஸ். இங்குள்ள, பெரும்பான்மை நிலங்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லாததால், கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில், மிக குறைந்த அளவிலேயே விவசாயம் உள்ளது. அத்துடன், இன்று கடும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள கிரீஸ் நாட்டில் வேலையின்மையால் எங்கும் வறுமை தாண்டவமாடுகிறது.
அதனால், வறுமையில் வாடும் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது அரசு. இந்த உதவி போதுமானதாக இல்லாததால், மக்களிடையே அதிருப்தி காண முடிகிறது. அரசு வழங்கும் ஆப்பிள் பழங்களுக்காக, கை ஏந்தும் மக்கள் கூட்டத்தை தான் படத்தில் காண்கிறோம்.
— ஜோல்னாபையன்.