
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல, 'டிவி' நடிகை கிம் கர்தாஷியான், 34; இவரின் உடல் அழகு குறித்து, மேற்கத்திய ஊடகங்களில், 'கிம், பின்னழைகையும், முன் அழகையும், அறுவை சிகிச்சை மூலம் பெரிதுபடுத்தியுள்ளார் என்றும், அவரின் அழகு செயற்கையானது மற்றும் மருந்து, மாத்திரை சாப்பிடுகிறார்...' என்றும் அடிக்கடி செய்திகள் வெளியாகின.
இதனால், கடுப்பான கிம், உடை எதுவும் அணியாமல், தன்னை, 'செல்பி' எடுத்து, சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். 'என் உடல் அழகு எல்லாமே ஒரிஜினல் தான். என் உடலை மிகவும் நேசிக்கிறேன். செயற்கையை புகுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...' என, கூறியுள்ளார்.
இத்தனைக்கும், கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— ஜோல்னாபையன்.