
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விதிவிலக்கு!
அம்மா தாயே என விளித்து
விரல் நீட்டி
பிச்சை கேட்கிறார்
முதியவர் ஒருவர் வீதியில்!
அனாதை குழந்தைகளுக்கு
உடைகளை தானம் வேண்டி
வீட்டின் கதவை தட்டுகிறாள்
நலிந்த பெண்ணொருத்தி!
நிதி வேண்டி
உண்டியலை குலுக்கி
நீட்டுகிறான்
கட்சித் தொண்டனொருவன்!
கோவிலுக்கு
காணிக்கை செலுத்தும்படி
சீட்டை சிரத்தையாய் நீட்டுகிறான்
பக்தனொருவன்!
நாடுகள்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு
பிச்சைகளை
உறுதி செய்து கொள்கின்றன!
என்னை மட்டும் ஏன்
விதி விலக்காய்
இருக்கச் சொல்கிறாய்
உன் அன்பை
அடைகாத்துக் கொண்டு!
— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.