தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : டிச 20, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரமா, சாபமா?

போர்க்களத்தில்

பூத்தொடுக்கும்

போட்டி வைக்கிறாய்!

சிக்கல்களில் சிக்க வைத்து

சிகரம் தொட

நிர்பந்திக்கிறாய்!

பெண்ணாய் பிறக்க வைத்து

பேரிடி தந்து விட்டாய்!

வறுமை, வஞ்சனை

சுடுசொல் இவற்றால்

பாதை சுமக்கிறாய்!

கற்பு எனும் பெயரில்

உளி கொண்டு உள்ளத்தை

உரசிப் பார்க்க விடுகிறாய்!

கண்ணீரில் கரைந்து

கரையேற வழியின்றி

தவித்துப் போகிறேன்

திக்குதிசை தெரியாமல்

திணறிப் போகிறேன்!

என் உணர்வுகள்

உதிரங்களால் உதிர்க்கப்படுவதை

நீ அறியாயோ?

நீ அளித்த வாழ்க்கை

எனக்கு வரமா, சாபமா?

வரம் என்றால்

வசந்தத்தை வழித்துணையாக்கு...

சாபம் எனில்

சாவையாவது

சடுதியில் சபையேற்றிடு!

இறைஞ்சுகிறேன் இறைவா...

என் கவிக்கு

செவி சாய்த்திடு!

ஆர்.மீனா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us