
காதலிக்காதீர்கள்!
காதலிக்காதீர்கள்...
நான் சொல்லவில்லை
தினம் தினம் ரத்தக்கறையுடன்
பயணிக்கும்
ரயிலின் சக்கரங்கள்
சொல்கின்றன!
காதலிக்காதீர்கள்...
நான் சொல்லவில்லை
விஷ மருந்துகளால்
நரம்புகளை அறுத்து
துடித்து கதறும்
இதயம் சொல்கிறது!
காதலிக்காதீர்கள்...
நான் சொல்லவில்லை
அடுக்குமாடிகளில் நின்றபடி
பூமி அதிர கீழே தள்ளும்
உயர்ந்த கட்டடங்கள்
சொல்கிறது!
காதலிக்காதீர்கள்...
நான் சொல்லவில்லை
தகுதியில்லையென நிராகரித்து
குடிகாரனாக்கும்
மது சொல்கிறது!
காதலிக்காதீர்கள்...
நான் சொல்லவில்லை
விழிகள் பிதுங்க
கால்கள் துடிக்க
கழுத்து இறுக்க
கொடூரமாய் கொல்லும்
மரணக் கயிறுகள்
சொல்கிறது!
காதலிக்காதீர்கள்...
நான் சொல்லவில்லை
எதிர்த்து நின்று வாழ பலமின்றி
ஓடி ஒளிந்து கொள்ளும்
முகவரியில்லாத காதல்
சொல்கிறது!
காதலிக்காதீர்கள்...
நான் சொல்லவில்லை
வன்முறை எனும் ஆயுதம் ஏந்தி
பழி தீர்க்க மறித்து நிற்கும்
உருவமேயில்லாத
ஜாதி சொல்கிறது!
— அ.கென்னடி, லால்குடி.

