தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீண்டு வர வேண்டும்

விதைக்குள்

பொதிந்து இருப்பினும்

மண்ணில் புதைந்து

எழும்ப வேண்டும்

விருட்சமாக வளர்வதற்கு!

கடலுக்குள்

கலந்து இருப்பினும்

ஆவியாக மேலேறி

கீழிறங்க வேண்டும்

மழைநீராய் பொழிவதற்கு!

தங்கத்திற்குள்

விரவி இருப்பினும்

நெருப்பில் உருகி

உறைய வேண்டும்

ஆபரணமாய் ஜொலிப்பதற்கு!

மூங்கிலுக்குள்

ஒளிந்து இருப்பினும்

தீக்காயமுற்று வர வேண்டும்

புல்லாங்குழலாய் இசைப்பதற்கு!

கரும்புக்குள்

கரைந்து இருப்பினும்

ஆலையில் நசுங்கி

பிழைத்து வர வேண்டும்

கற்கண்டாய் இனிப்பதற்கு!

களிமண்ணுக்குள்

கூடி இருப்பினும்

குழைத்துப் பிசைந்தும்

குதூகலித்து வர வேண்டும்

பாண்டங்களாய் மாறுவதற்கு!

துணிக்குள்

பரவி இருப்பினும்

ஊசிமுனையால்

துளைபட்டு வர வேண்டும்

ஆடையாய் ஆவதற்கு!

கல்லுக்குள்

கைகோர்த்து இருப்பினும்

உளியால் சிதலப்பட்டு

சிரித்து வர வேண்டும்

சிற்பங்களாய் சிறப்பதற்கு!

வெற்றிகள் எதுவும்

வெறுமனே

கிடைத்து விடுவதில்லை

எனும்போது...

சங்கடம் தரும்

சவால்களை சமாளித்து

மீண்டு வரத்தானே வேண்டும்

மாமனிதனாய் மாறுவதற்கு!

கீர்த்தி, கொளத்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us