PUBLISHED ON : செப் 25, 2016

அ நிறம் | அளவு
தோல்வி என்பது
தோல்வி என்பது
வாழ்க்கையின் முடிவல்ல
வெற்றியின் துவக்கம்!
தோல்வி என்பது
விதியின் வலி அல்ல
விதியை மாற்றும் வழி!
தோல்வி என்பது
தலைகுனியும் அவமானமல்ல
தலை நிமிரும் அடையாளம்!
தோல்வி என்பது
வெட்கப்படும் செயல் அல்ல
வெல்லத் தூண்டும் வீரம்!
தோல்வி என்பது
முள் குத்தும் பாதை அல்ல
முன்னேறச் சொல்லும் பாடம்!
தோல்வி என்பது
மிரள வைக்கும் பூதம் அல்ல
அனுபவம் தரும் தேவதை!
தோல்வி என்பது
துன்பத்தின் நினைவு அல்ல
தூங்க விடாத கனவு!
தோல்வி என்பது
கிழிந்த புத்தகம் அல்ல
வாழ்க்கையின் சிறந்த பக்கம்!
தோல்வி என்பது
பின்னிழுக்கும் பயம் அல்ல
வெற்றியின் அருகே
அழைக்கும் துணிவு!
தோல்வி என்பது
முட்டாள்களின்
தலைவன் அல்ல
அறிவாளிகளின் ஆசிரியர்!
ஒரே தோல்வியில்
துவண்டு விடாமல்
மேலும் மேலும்
தோற்பதற்கு பழகுவோம்!
— மருதாணி, சென்னை.
