PUBLISHED ON : அக் 16, 2016

அ நிறம் | அளவு
காதலும், நட்பும்!
எக்கணம் நினைத்தாலும்
இரு விழிகள் ஈரத்தை கசிய விடும்...
ஆயிரம் உறவுகள் வந்தாலும்
எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும்
தேசம் விட்டு தேசம் சென்றாலும்
தேகத்தில் தேங்கியே இருக்கும்...
தேடி வந்த சொந்தங்களும்
நாடி வரும் பந்தங்களும்
கோடி கோடியாய் கொட்டினாலும்
பாச மழை பொழிந்தாலும்
இறுதி மூச்சு உள்ளவரை
இதயத்தில் இணைந்திருக்கும்...
காலங்கள் கடந்தாலும்
தலைமுறைகள் தழைத்தாலும்
உள்ளத்தின் உள்ளே
உறைந்து கிடக்கும்
உண்மைக் காதலும், நட்பும்!
— ஆர்.மீனா, மதுரை.
