PUBLISHED ON : நவ 20, 2016

அ நிறம் | அளவு
எங்கு தேடுவது?
பிஞ்சுக் குழந்தைகள்
குடிக்கும் பாலிலும்
கலப்படம்!
எளியவர் அருந்தும்
தேயிலையிலும்
கலப்படம்!
வாயை புண்ணாக்கும்
புகையிலை தூளிலும்
கலப்படம்!
உயிர் காக்கும்
மருந்து வகைகளிலும்
கலப்படம்!
ஏழை - பணக்காரர்
பேதமின்றி குடிக்கும்
மதுவிலும்
கலப்படம்!
கைக்கு கை மாறும்
பண நோட்டுக்களிலும்
கலப்படம்!
பதவி பெறும்
தேர்தல் ஓட்டுக்களிலும்
கலப்படம்!
விமானம் ஏறும்
கடவுச் சீட்டுகளிலும்
கலப்படம்!
தண்ணீரில், எண்ணெயில்
பழரசங்களில் எல்லாம்
கலப்படம்!
எங்கு, எப்படி தான் தேடுவது...
நேர்மையில் கலப்படமில்லாத
அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும்!
— 'சொல்கேளான்' ஏ.வி.கிரி,
சென்னை.
