PUBLISHED ON : ஜன 15, 2017

அ நிறம் | அளவு
வேறென்ன இருக்கப் போகிறது?
* மூடநம்பிக்கையை கைவிடுங்கள் என்றால்
கலாசாரத்தை எப்படி
கைவிட முடியும் என்பீர்கள்!
* பேராசையை குறையுங்கள் என்றால்
வசதியாய் வாழ்வதில்
தவறென்ன என்பீர்கள்!
* குறுக்கு வழியில் செல்லாதீர்கள் என்றால்
வாய்ப்பை பயன்படுத்தினால் தானே
வளமை வரும் என்பீர்கள்!
* ஏமாற்றி பிழைக்காதீர்கள் என்றால்
அது ஏமாளிகளின்
தவறு தானே என்பீர்கள்!
* பிறர் பொருளுக்கு
ஆசைப்படாதீர்கள் என்றால்
வலியவன் தானே வாழ முடியும் என்பீர்கள்!
* பொய் புரட்டு செய்யாதீர்கள் என்றால்
எல்லாரும் நல்லவரா என்று
எதிர்கேள்வி கேட்பீர்கள்!
* இத்தனைக்கும் பிறகும்
பிறரிடம் நீங்கள்
காட்டுவதாக சொல்லிக் கொள்ளும்
மனிதாபிமானத்தில்
உங்கள் சுய அபிமானத்தை தவிர
வேறென்ன இருக்கப் போகிறது!
— கீர்த்தி, கொளத்தூர்
