PUBLISHED ON : மே 07, 2017

அ நிறம் | அளவு
முரண்!
மோசடி மன்னனுக்கு
வெளிநாட்டில் பாதுகாப்பு
சோற்றுக்கு வித்திடும்
விவசாயிக்கோ உள்ளூரில் தடியடி!
கம்பிகளின் வாசலில்
வெள்ளை வேட்டியின்
சாஷ்டாங்க நமஸ்காரம்!
நாட்டை அழகாய் ஆள
ஆட்சியிலிருப்போருக்கு மனமில்லை
ஆளப்படுவோருக்கு பணமில்லை!
அடுப்பெரிக்க விறகுண்டு...
வயிற்றை நிரப்ப சோறுண்டா?
மீத்தேன் தேவையில்லை...
பட்டினி போக்கும்
பசுமை வயல் போதும்!
என்னை போன்றோருக்கு
பேனா முனையில்
மட்டுமே
வீரமும், வீரியமும்!
தனக்கான கடமைகள்
கட்டி வைத்திருக்க
சமூகத்தின் சங்கடம் தீர்ப்பது எங்ஙனம்?
ஆயுளின் ஒவ்வொரு நாளும்
கழிந்தே வருகிறது
எங்களின் கையாலாகாதனத்தில்!
— வேணிமகள், சென்னை.
