PUBLISHED ON : மே 28, 2017

அ நிறம் | அளவு
கடமை தவறாதிரு!
அன்பு செய்வதில்
காற்றாய் இருந்து விடு
உன்னை யாரும்
தடுக்க முடியாது!
கருணை பொழிவதில்
கடலாய் இருந்து விடு
உன்னை யாரும்
அளக்க முடியாது!
பாசம் காட்டுவதில்
மழையாய் இருந்து விடு
உன்னை யாரும்
மறுக்க முடியாது!
உதவி செய்வதில்
மலையாய் இருந்து விடு
உன்னை யாரும்
மறைக்க முடியாது!
பிறர் வாழ்வில்
ஒளியாய் இருந்து விடு
உன்னை யாரும்
பிடிக்க முடியாது!
பிறரை புரிந்து கொள்வதில்
கண்ணாடியாய் இருந்து விடு
உன்னை யாராலும்
குற்றம் சொல்ல முடியாது!
உழைப்பில் நீ
உறங்காது இருந்து விடு
உன் வெற்றியை யாராலும்
பறிக்க முடியாது!
யார் தடுத்தாலும்
கடமை தவறாதிரு
கல்வெட்டில் உன் பெயரை
தவிர்க்க முடியாது!
— செல்லம் ரகு, திருப்பூர்.
