PUBLISHED ON : ஜூன் 11, 2017

அ நிறம் | அளவு
மன்னித்துவிடுங்கள்!
மன்னித்து விடுங்கள்...
ஏனென்றால்
மன்னிப்பே
மகிழ்ச்சியின் திறவுகோல்!
மன்னிக்கும் மனதிலிருந்து
வெறுப்பு வெளியேறி விடுவதால்
ஆனந்தத் தென்றலின் ஆட்சி
நெஞ்சில் மலரத் துவங்கும்
ஆகவே மன்னித்து விடுங்கள்!
நண்பர்களின்
தவறை மன்னியுங்கள்
நட்பு விருட்சம்
பூத்துக் குலுங்கும்!
உறவினர்களின்
தவறை மன்னியுங்கள்
சினேகிதப் பறவைகள்
சிறகை விரிக்கும்!
அண்டை வீட்டாரின்
தவறை மன்னியுங்கள்
ஆபத்து காலத்தில்
உதவிக் கரங்கள் நீளும்!
பகைவனின்
தவறை மன்னியுங்கள்
எதிர்ப்பு மேகங்கள்
விலகத் துவங்கும்!
மன்னித்து விடுங்கள்...
ஏனென்றால்
மன்னிப்பே
மகிழ்ச்சியின் திறவுகோல்!
— கவிதாசன், கோவை
